17 ஏணுறுமோங் காரவொளி யின்மிளிரும் பரஞ்சுடரோன் நீணிலைய தருவடரும் காந்தமலை நின்றருள்வான் தாணிழலே தஞ்சமெனச் சார்ந்தவன்றன் திருத்தொண்டே பேணிமகி ழாமனிதப் பிறப்புமோர் பிறப்பாமோ? பொய்யாம் பிறவிப் புதலிற் புகுந்துழன்று நையா வருந்தி நலமுறவோர் வழியறியா தையோ யினியார்கொ லாண்டருள்வா ரெனநின்றேன் செய்யாருங் காந்தமலைச் சேயே அடைக்கலமே. 70. 71. உடன் மிகுத்த பிணிவருத்த உய்யும் வழி காணாதே கடலெனப்பல் பவப்பரப்பிற் கவிழ்த்துவிழுந் தரற்றுகின்றேன் மிடலிருக்குங் காலனுக்கு மிகவஞ்சி வந்தடைந்தேன் மடலிருக்கு மலர்க்காந்த மலையாய் அடைக்கலமே. 72. பண்ணாத பாவப் பகுதியெலா நன்கியற்றி நண்ணாத நலமுடையே னாயேன்மற் றினியென்னே எண்ணாது செய்ததற்கோர் தீர்வென் றிரங்குகின்றேன் விண்ணோர்சூழ் காந்தமலை வேலா அடைக்கலமே. 73. என்றேனு மோனத் திருந்துள்ளே நின்னுருவைக் குன்றாத அன்பிற் குறித்தறியே னினியெனக்கே ஒன்றாத இன்பமெவ்வா றுறுமென்றே யேங்கிகின்றேன் என்றாதாய் காந்தமலை யீசா அடைக்கலமே? 74. நீல மயிலை நினைத்தறியேன் செவ்வேலைக் கோலத் திருவுருவைக் குறித்தறியே னாயவெனக் கேலத் திருவடிநீ யெவ்வா றளித்திடுவாய் சீலத்தாய் காந்தமலைச் செல்வா அடைக்கலமே. 2 75.
பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/19
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை