19 மென்னாவிற் கேசுவைக்கும் தேனை விரும்பாதே அன்னாயென் னப்பாவென் றங்குருகி நிற்பவர்தம் நன்னாவும் என்பும் நலவுடலு மினிக்கவைக்கும் மன்னாளுங் காந்தமலை வந்தூதாய் கோத்தும்பீ. பறப்பதுவே நெறியாகி வாழ்க்கையெலாம் பாழாக்கிச் சிறப்பதின்றி வாளா திரியாதே பேரின்பத் 82. துறப்பதிக்கும் வேலன் உயருளை நினைந்தவன்வாழ் பிறப்பறுக்கும் காந்தமலை பேர்ந்தூதாய் கோத்தும்பீ. 83. நீதிரியுந் தொழிற்கெல்லாம் நெட்டுயிர்த்து மோயினணி யேதிரிந்து வாடுமலர் தம்மை யிலக்காக்கா தாதரவோ டண்முவார்க் கானந்தத் தேன்பொழியுந் தாதையனான் காந்தமலை சார்ந்தூதாய் கோத்தும்பீ. 84. யாழனைய வின்னிசையை யார்க்கும் பயன்படுத்தா தேழையைப்போற் பாடி யிரும்பொழிலிற் றிரியாதே வாழ்வரு ளெனவந்து வணங்குவார்க் கெளியகுகன் வேழமுடைக் காந்தமலை மேயூதாய் கோத்தும்பீ. வாழ்க்கையெலாம் பாழாக்கி மலரிற் புளித்தமது தாழ்க்கையெனக் கண்டுமுண்டு தருக்கித் திரியாதே பூழ்க்கையுடைக் கணபதிபின் போந்த முருகபிரான் காழ்க்கையுறு காந்தமலை கண்டூதாய் கோத்தும்பீ. புட்குளறு காலுடைய பொற்பிருந்தும் அந்தோ நீ கட்குடிய னாகிக் கருத்தழிந்து மாளாதே விட்குடியார் தமக்கிடரை வீயவருள் நற்கருணைக் குட்குடியான் காந்தமலை யுற்றூதாய் கோத்தும்பீ. 85. 86. 87
பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/21
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை