பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 காமனுக்கே வின்னாணாய்க் கடிமலரம் பைவிடுத்த தீமதிப்பும் பாவமும் தீர நினைக்குதியேல் சேமமுற்றுத் தன்னடியார் சேர வருள்முருகன் வாமமுற்ற காந்தமலை வந்தூதாய் கோத்தும்பீ. 88. கடவுளர்க்க வைத்த கடிமலரை யெச்சிலாப் படவியற்றி நீசெய்த பாவமெலாம் தீரவெனின் நடமியற்று மீசற்கே நன்மொழியொன் றையுரைத்தான் தடமுகத்தான் காந்தமலை சார்ந்தூதாய் கோத்தும்பீ. 89. மேனி கரியையே யென்றாலும் மேதினியோர் ஆன வகமு மடர்கரிய விருளாயென் றோவிலா வாறு நீ எம்மான் முருகவேள் தானமருங் காந்தமலை சார்ந்தூதாய் கோத்தும்பீ. 90. வேலார்ந்த கையுடையாய் விமலாவோ சான்றாண்மை தோலாத நாவடையோர் சொன்மாலை பூண்டய மாலார்ந்த நாயேனை மாப்புகழ்சேர் காந்தமலைப் பாலே வலஞ்செய்யப் பணித்திட்டா லாகாதோ? ? கும்பமுனி கேட்கக் குளிர்முத் தமிழுரைத்த எம்பெருமாள் காந்தமலை யீசா பிணிமுகமாம் வெம்புமத யானையாய் வீணனேன் நினைவாழ்த்தப் பம்புமருட் கண்கொண்டு பார்த்திட்டா லாகாதோ? வேதா கமத்துக்கு மேற்பொருளே மெய்யுணர்ந்தார் போதா மலக்கருத்திற் பொற்சுடரே வோங்கார நாதா வளர்காந்த நன்மலையப் பாவடியேற் காதார மாவருணீ யளித்திட்டா லாகாதோ? gl. 92. 93.