21 கங்கைமக னேயுமையாள் காதற் புதல்வகுக சங்கரனார் தம்பால தாழ்வில்லாக் காந்தமலை தங்குதண்ட பாணீ தவித்துருகு நாயேனை இங்கடியா னென்றுன்பா லேற்றிட்டா லாகாதோ? 94. ஆதிமனு வாமஞ்ஞை யாய பரிபுடையாப் சீதமலர் போன்றாறு செம்முகத்தாய் காந்தமலை மீதமரும் வள்ளால் விரைந்தடியேன் பழங்கண்ணைக் காதவருள் தந்துகரங் காட்டினா லாகாதோ? 95. குன்றுருவ வேல்வாங்கும் கொற்றவனே ஈற்றவத்தார்க் கென்றுமழி யாதசுக மீந்தருளுங் காந்தமலை நின்றருளும் சேயே நினையாத பொய்யனேற் குன் றிருவார் சீரடியி னுருக்காட்டி லாகாதோ? 96. வேழம் பிடிக்கு விளங்கனியைப் பறித்தூட்டிப் பாழி யிருக்கும் பசும்புனலை யேயருத்தி வாழும் வளக்காந்த மாமலையாய் நாயேனை ஆழருளிற் சற்றே அழுத்திவைத்தா லாகாதோ? வேதாவைச் சிறைவைத்த வித்தகனே காந்தமலை நாதா குறவள்ளி நாயகனே நினையண்மி 97. நீதான் புகலென்று நேர்ந்தேனைப் பார்த்திரங்கிப் போதார் அடிசூட்டிப் போற்றுத லாகாதோ? 98. உமையாள் விழிமணியே ஓங்காரத் துட்பொருளே அமையாத சீருடுத்த வங்காந்த மாமலையாய் எமையா தரஞ்செய்தா னென்றே நினைந்தடியேன் சுமையாம் பவப்பிழம்பைத் தூற்றிவிட லாகாதோ? 99.
பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/23
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை