பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 கொல்லையம் படப்பைக் குமரர்கள் வேடர் குளிர்மது வாக்கவுண் டவர்க்கே கொல்லையிற் பாலீ காந்தமா மலைவாழ் குமரனே யமரநா யகனே. மலையெலாங் கோயில் கொண்டனை யிரும்பு மலையெனு மெளியனேன் மனத்துச் சிலையினிற் கோயில் கொள்ளுதல் நினக்குத் திருவுள மின்றுகொல் அறல்சேர்ந் தலைதவழ் சிறுகான் யாற்றினின் மரவம் அலருக்குத் திடத்திரைக் கையால் குலைபெற வீசுங் காந்தமா மலைவாழ் குமரனே யமரநா யகனே. வேடர்தம் மிடையே பொருந்திய வள்ளி விமலையைப் பொருந்தினை புலமாம் வேடர்தம் மிடையே பொருந்திய மனத்தை விதியுற நீ பொருந் தா யோ கூடுறும் யானை மாதவர்க்கினிய தொண்டுசெய் குணமிக மேவக் கூடுறு மணிசால் காந்தமா மலைவாழ் குமரனே யமரநா யகனே. இந்திரன் முதலோர் இழந்த தந்நிலையே யெய்திட வருள்செய்த நீமற் றந்தமில் வினையை யகற்றியென் பழைய அறிவுறு நிலையரு ளாயோ 103. 104. 105.