இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
. 24 செந்தமிழ் மணக்கு நாவலர் தங்கள் செய்யுளுக் கழகுசெய் கின்ற கொந்துறு சோலைக் காந்தமா மலைவாழ் குமரனே யமரநா யகனே. யானையைக்காட்டி மான்றரு பிடியைப் பிடித்தனை யென்பரால் எளியேன் மானுறா வகைநின் பிணிமுகங் காட்டி மனத்தினைப் பிடித்தல்செய் யாயோ தேனினை யொழுக விட்டிடும் வெள்ளைச் செறியிறால் திங்களைப் புரையும் கோனிலாம் சோலைக் காந்தமா மலைவாழ் குமரனே யமரநா யகனே. சரவணப் பொய்கைச் செய்யதா மரையிற் றவழ்ந்தின்பங் கண்டநீ யென்றன் கரவணப் பெருத்த மனமெனும் வெள்ளைக் கமலத்தி லிருந்திடாய் கொல்லோ அரவினைப் பொருவும் வண்டொழுங்கிறாலா மம்மதி யைத்தொடர்ந் திசைக்கும் குரவுசூழ் சோலைக் காந்தமா மலைவாழ் குமரனே யமரநா யகனே. தந்தையை யேவும் தனயனீ யென்று தமியனே னறிந்தன னாதல் எந்தைநின் றன்னை யெனக்கருள் செய்ய எழுந்திரு வென்றுரைக் கின்றேன் 106. 107. 108.