81 இவ்வுலகின் மலையெல்லா மிருப்பான் கண்டாய் இறைவனுக்கோ ருரைதந்த வாசான் கண்டாய் கவ்வையுடை முகில்புடைசூழ் சோலை மோகைக் காந்தமலை வாழ்ந்தகதிர் வேலன் றானே. மலக்குவிய லிருந்தெடுத்தே யன்பர் தம்மை . மாளாத வாழ்வருளிப் புரப்பான் கண்டாய் நலக்குமுரு வெழிலிளமை யெந்த நாளும் நலியாத பேருருவம் பூண்டான் கண்டாய் நிலக்கணியாங் குறிஞ்சிநிலத் தலைவன் கண்டாய் நீடமரர் தலைகாத்த வள்ளல் கண்டாய் கலக்கமிலா நீர்வளஞ்சூழ் செல்வ மோகைக் காந்தமலை வாழ்ந்தகதிர் வேலன் றானே. மூவுலகும் போற்றிசெயும் முதல்வன் கண்டாய் முத்திநிலை யருளுமொரு வள்ளல் கண்டாய் தாவுமயில் மீதுலவு தருமன் கண்டாய் சாருமுடற் பிறவிக்கு மருந்து கண்டாய் ஓவுதலில் பெருங்கருணை யுடையான் கண்டாய் உயர்சகசா நந்தநிலை தருவோன் கண்டாய் காவிலுயர் மந்தியினங் களித்துச் சூழும் காந்தமலை வாழ்ந்தகதிர் வேலன் றானே. பன்னிரண்டு கரமுடையாய் போற்றி போற்றி பரிதியென மயிலிவர்வாய் போற்றி போற்றி துன்னிரண்டு கண்மணியே போற்றி போற்றி துங்கமனத் தோர்க்கமுதே போற்றி போற்றி 127. 128. 129.
பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை