பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மன்னிரண்டு வினையொழிப்பாய் போற்றி போற்றி வள்ளியிணை நகிற்புணர்வாய் போற்றி போற்றி கன்னிவந்து மயில்பயிலும் பொழில்சேர் மோகைக் காந்தமலை யுடையானே போற்றி போற்றி. 130. மறையறியாத் தாளுடைய மன்னா போற்றி மலரோனைச் சிறையிருத்த வல்லாய் போற்றி அறைவரிய புகழுடைய வையா போற்றி ஆறுமுகங் கொண்டருளு மப்பா போற்றி குறைவரிய பெருங்கருணை யுடையாய் போற்றி குத்திரத்தைத் துளைத்தவயிற் கோவே போற்றி கறையில்புகழ் வளர்மோக னூரின் மேவுங் காந்தமலை யுடையானே போற்றி போற்றி. 131. மாலுடைய மருமகனாம் வாழ்வே போற்றி மாற்றலர்கள் கூற்றமெனும் வேலா போற்றி தானுடைய புலவர்புக முணிவாய் போற்றி தஞ்சமடைந் தார்ப்புரக்குந் தயையாய் போற்றி நீலுடைய மயிலிவர்ந்து வருவோய் போற்றி நிறைந்தெங்கு மிலங்குபரம் பொருளே போற்றி கானுடைய தண்டையணி குமரா போற்றி காந்தமலை யுடையானே போற்றி போற்றி மடலாகி மலராகி வாழ்வாய் போற்றி மணமாகி மென்மையாய் வருவாய் போற்றி அடலாகி யாண்மையா யமைந்தாய் போற்றி ஆரணமா யாகமமாய் அவிர்ந்தாய் போற்றி 132.