பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 உடலாகி உயிராகி யுறைவாய் போற்றி உள்ளமா யுணர்வாகி யுள்ளாய் போற்றி கடலாகி நிலமாகிக் களித்தாய் போற்றி காந்தமலை யுடையானே போற்றி போற்றி. ஒருபொருளா நின்றபெரு முதலே போற்றி ஓரிரண்டு தேவியரை யுவந்தாய் போற்றி வருமொருமூ வுலகாகி வளர்வாய் போற்றி மாமறைநான் காகிவளர் மன்னா போற்றி மருவுவலிப் பூதமைந்தாய் மலிந்தாய் போற்றி வாகுடைய கலையாறாய் வாய்த்தாய் போற்றி கருவுயிர்சூ ழேழுலகங் காத்தாய் போற்றி 133. 134 காந்தமலை யுடையானே போற்றி போற்றி. திருமுருகா நின்னுடைய பாதம் போற்றி சீர்க்கடம்பா நின்னுடைய சிலம்பு போற்றி பெருகருளோய் நினதுதிரு விடையே போற்றி பிஞ்ஞகன்சேய் நினதுதிருக் கரங்கள் போற்றி உடுகன்பர் போற்றுகின்றன் கைவேல் போற்றி ஓராறு மாமுகங்கள் போற்றி போற்றி தருகருணை நிதியேநின் முடிகள் போற்றி சற்குருவே காந்தமலை போற்றி போற்றி. ஐயாவென் னத்தாவென் னப்பா போற்றி அன்னாயென் னன்பேயென் னருளே போற்றி மெய்யாமென் னுயிரேயென் னுளமே போற்றி வேதமே வேதியனே விகிர்தா போற்றி 3 135.