பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தாவுபல மலத்தடையை யறவே யோட்டித் தழுவுதல் நிலையருளிப் புரந்து நிற்கும் காவுபல சூழ்ந்துமணங் கவினு மோகைக் காந்தமலை முருகனிரு கமலத் தாளே. இரவினிலும் பகலினிலும் வழிநடக்கும் 142. இடத்தினிலும் வீட்டினிலும் காட்டின் கண்ணும் பரவுமெந்தப் பொழுதினிலும் வைத போதும் படுத்திருக்கும் பொழுதுமிருந் திடினு மன்பர்க் குரவுதவி ராதருளே தந்து காத்தங் குற்றபல வின்புதவி ஒளிரா நிற்கும் கரவுதவிர் நெஞ்சகத்தார் பரவிச் சூழும் காந்தமலை முருகனிரு கமலத் தாளே. 143. பெருங்கடலிற் சூரியன்வந் தணைந்த தென்னப் பிறங்குமயின் முதுகினிடை யொளியே வீசும் கருங்கடலிற் புணையெனவே பிறப்பைப் போக்கும் கமலமென மலர்ந்தழகு கவினித் தோன்றும் பெருங்கடமை யியற்றுமன்பர் புந்திக் குள்ளே பிரசமென ஆற்றெடுக்கும் பொழில்க ளெல்லாம் கருங்கவினால் வானளந்து திருமா லேய்க்குங் காந்தமலை முருகனிரு கமலத் தாளே. ஒன்றுமகந் திரண்டுவரு மன்பி னோர்கள் உளமூன்று பெருமானை நாலு கையார் கன்றின்வழி வந்தவனை யஞ்சா மேயக் கருங்குன்ற மாறாக வேல்விட் டோனை 144.