பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் துணை முகவுரை கொங்கு நன்னாட்டிற் காவிரி வடகரையில் உள்ள சிவ தலமாகிய மோகனூரின் கண் விளங்கும் காந்தமலையிற் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் இளமுருகன் திருவடிக்கண் உலையா அன்புடையாரொருவர் சூட்டியது இப்பாமாலை யாகும். அக்கடவுளை நாவாரப்பாடி வழிபடவேண்டுமென்னும் நோக்கத்தால் எளியேனும் நண்பர்களும், அடிக்கடி அருந் தமிழ்ச் சுவையையும் முருகன்பாலன்பையும் பலவகையால் எமக்கு ஊட்டிவரும் பெரியார் பிரம்மஸ்ரீ வித்துவான் கி.வா. ஜகந்நாதையரவர்களைச் சிலசெய்யுட்கள் எழுதியளிக்க வேண்டி னோம். காந்தமலையானை இதயக் கோயிலிற் சிறைப்படுத்திய அன்னார் பல வருடங்களுக்கு முன் எங்களுக்கு ஏற்றவாறு எளிய நடையில் அவ்வப்போது எழுதி விடுத்த பாக்களிற் சிலவற்றைத் தொகுத்து இந்நூலுருவத்தில் வெளியிட முன் வந்தேன். காந்தமலையான் புகழைப் பாடி இன்பங்காண்பதற்கு இப் பாக்கள் நற்றுணையாக இருக்குமென்பதில் ஐயமில்லை. டி இதனைத் தொகுக்கும் பொழுது, பாக்களை இயற்றியவ ருடைய நண்பரும் முருகன்பால் வீறிய அன்பினரும் ஆகிய பிரம்மஸ்ரீ வித்துவான் ச.கு. கணபதி ஐயரவர்கள் தமக்குத் தம் நண்பர் எழுதிய கடிதங்களில் அமைத்திருந்த பாடல் களை அளித்துதவியதோடன்றி இப்பாக்களைப் புத்தக உருவாக்குவதற்குப் பெருந்துணையாக இருந்தார்கள். அவர் களை எழுமையும் மறவேன். மோகனூர், 16-8-1933 இங்ஙனம்: பொ.முருகன்