பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நீராடேன் றூயவுடை நேர வுடுத்தறியேன் சீராடும் நின்பூசை செய்தறியேன் நோன்புகளைப் பாராடு மாறு பயின்றறியே னென்செய்கேன் காராடும் பூம்பொழில்சூழ் காந்தமலை வேலவனே. 4. எண்ணாத பாவி யிவனென்று புறக்கணித்தல் பண்ணாதே பண்ணிற் பரிதவிப்பே னையாவென் அண்ணா அரசே அமுதே அனைத்துயிர்க்கும் கண்ணே கடிபொழில்சூழ் காந்தமலை வேலவனே. 5. இன்றுலகி னின்பம் இருந்துபுசித் திட்டுநமன் அன்றுவருங் காலத்திலையோ விளை துயரம் ஒன்றுகொலோ உள்ளேன் உன்வடிகள் என்செய்கேன் கன்றுபசு வோடுறையுங் காந்தமலை வேலவனே. 6. உடலிருக்கும் போதே உயிர்க்குறுதி தேடறியேன் படலிருக்கு மெண்ணத்துப் படருநம னார்தமர்வந் தடலியற்றுங் காலத்தி லார்வந்து காப்பாரே கடலிருக்கு நற்கருணைக் காந்தமலை வேலவனே. பொறிவாயி லைந்தவியாப் புலையனே னின்னருளே செறிவாய நன்னிலையிற் சேர்குவனே சேரேனோ அறிவாய திருவுருவத் தையா கருமந்தி 7. கறிவாய் துணருகுக்குங் காந்தமலை வேலவனே. 8 6 நான்செய்தேன் நான்செய்தேன் நலமெல்லா மென்றகந்தை தான்செய்தே னன்றித் தளிர்ப்பதங்க ணினைத்திலனே தேன்செய்த பூங்கடப்பந் திருமாலை மார்பபூங் கான்செய்த பைம்பொழில்சூழ் காந்தமலை வேலவனே. 9.