பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்ல வேண்டும், மற்றொன்று இங்கு அறிமுகம் செய்விக்கப்படும் நூலான, திருநெல்வேலியை அடுத்துள்ள தச்ச நல்லூரைச் சேர்ந்த அழகிய சொக்க நாத பிள்ளை இயற்றிய காந் தியம்மை பேரில் கலித்துறை அந்தாதி. பஞ்சமும் பாட்டும் தமிழ் இலக்கிய தீ தில் பஞ்சப் பாட்டுக்களுக்குக் குறைவே இல்லை . அதாவது தமிழ்ப் புலவர்கள் புரவலர்களையும், மன்னர் களையும்.. பிரபுக்களையும் நாடிச் சென்று, தமது வறுமை நிலையை எடுத்துக் கூறி அவர்களிடம் குறையிரந்து பாடிய பாடல்களுக்குக் குறைவே இல்லை, இத்தகைய புலவர்களை நாம் புறநானூற்றுக் காலம் தொட்டே இனம் காண இயலும் , திருமுருக ஈற்றுப்படையைத் தவிர பெரும்பாணாற்றுப் 1..ை, சிறு பாணாற்றுப் படை போன்ற முழு நூல்களான ஆற்றுப் படை நூல்களும், இந்த உண்மையைத் தாள் பறை சாற்றுகின்றன. இவ்வாறு புலவர்கள் உதவி நாடிச் செல்வதும், உதவி கிடைத் தால் உதவியவர்களை இந்திரன், சந்திரன் என்று வானளாவப் புகழ்வதும், உதவி கிடைக்காவிட்டால், 'வஞ்சகர் பால் நடந்த லைந்த காலிற் புண்ணும். வாயில் தொறும் முட்டுண்ட தலையிற் 4.ண்ணு" மாகத் திரும்பி வருவதும் தமிழ் இலக்கியத்தில் பாவ லாகக் காணப்படும் செய் தியேயாகும். ஆனால் சமுதாயம் முழு வதையும் உலுக்கிக் குலுக்கிய உணவுப் பஞ்சங்கள் ஏற்பட்ட காலத் தில், அதனால் சமுதாய வாழ்க்கை எவ்வாறெல்லாம் பாதிக்கப் பட்டது என்பதை எடுத்துக் கூறு கின்ற புலவர் பெருமக்களை விவரக்கு வைத்துத் தான் தேட வேண்டும். ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் நிகழ்ந்த பஞ்சங்களைக் குறித்து முன்னர் குறிப்பிட்டோம். இந்தப் பஞ்சங்கள் புலவர்களையும் விட்டு வைத்திருக்காது ; பஞ்சத் திலே சிக்கி அவ திப்புடாத அளவுக்கு த் த மிழ்ப் புலவர் கள் பணம் படைத்தவராகவும், பங்களா வாசிக ளாகவும் வாழ்ந்து விடவில்லை. என்றாலும், அந்தப் புலவர் களில் சிலருக்கேனும் அந்தப் பஞ்சத்தைப் பற்றியும், அதனால் பாதிக்கப்பட்டுப் படாதபாடு பட்ட மக்களைப் பற்றியும் உணர் வோ, நினைப்போ இருந்து, அதனைப் பிரதிபலிக்கக் கூடிய பாடல்களை எழுதியுள்ளார்களா என்று. பார்த்தால் அத்தகைய பாடல்கள் கிட்டுவது மிகவும் அரிதாகவே உள்ளது. “ஓர்' தட்டிலே பொன்னும், ஓர் தட்டிலே நெல்லும் ஒக்க விற்கும் கார் தட்டி 8