பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 காந்திமதி மேலும் நிலமெல்லாம் விளைச்சலற்றுத் தரிசாகக் கிடந்த அந்தப் பஞ்ச காலத்திலும், அந்த விளைவில்லா நிலங்களுக்கு வரி வசூல் செய்வதை நிறுத்தி வைக்கவோ, தள்ளுபடி செய்யவோ முனையாது, ' அந்தக் காலத்திலும் நிலவரியை வசூலிக்க முனைந்த ஆங்கிலேயர் ஆட்சியையும் அதன் அதிகாரிகளையும் குறித்தும் அவர் இரண்டு விருத்தங்கள் பாடியுள்ளார். இரண்டும் சிவனையும் திருமாலையும் பற்றி நிந்தாஸ்துதியாகப் பாடிய பாடல்களாகும். சிவபெருமானிடம் மாடு இருந்தும், அதனை மேய்ப்பதற்கு மைத்துனனான திருமால் இருந்தும், உழுவதற்குக் கையிலே சூலமிருந்தும், பெரிய நிலப்பரப்பும் இருந்தும்கூட, அவன் ஏர் பிடிப்பதை விட்டுவிட்டு, பிச்சை எடுத்துத் திரிவ தற்குக் காரணம், இந்த இரக்கச் சித்தம் இல்லாது நில வரி வசூல் செய்யும் அதிகாரிகள்தாம் என்று பாடியுள்ளார். அவர், அழல் ஒக்கும் கோடை நட்டுப் பாழிலே அதிகாரிகள் செய் இழவுக்கு அஞ்சி ஏர்விட்டு அரன் பிச்சை ஏற்றனனே. இதே போன்று திருமாலைப்பற்றிய நிந்தாஸ்துதியிலும், திருமாலுக்கு மகாபலிச் சக்கரவர்த்தி தந்த மூவடி மண்ணும், கோகுலத்தில் மேய் த் த மாடுகளும், பரசுராமனின் கலப்பையும், இருந்தும்கூட, அவனும் இத்தகைய அதிகாரிகளின் கொடுமைக்கு அஞ்சியே பயிர்த்தொழிலை மேற்கொள்ளாது மண்ணைத் தின்று: வாழ்ந்தான் என்று அவர் பாடியுள்ளார். இங்கு ஓர் உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. இந்த நித்தாஸ்துதிப் பாடல்களின் மூலம் வேதநாயகம் பிள்ளை நிலவரி? வசூல் செய்யும் அதிகாரிகளை, அதாவது அரசாங்கத்தின் பிரதி நிதிகளை மறைமுகத் தாக்கியுள்ளார். விளைச்சலற்ற காலத்தில் வரிகளைத் தள்ளுபடி செய்யாமலிருப்பது அ நியாயம் என்பதையும் அவர் சொல்லாமற் சொல்லிச் சுட்டிக் காட்டியுள்ளார், சுருங்கச் சொன்னால், அரசாங்கத்தின் நிதி வசூல் இலாகாவுக்கு எதிராகவே பிரசாரம் செய்திருக்கிறார், அவர் அந்த அரசாங் கத்தின்கீழ் பணியாற்றி வந்த ஒரு ஜில்லா அதிகாரி என்பதை