பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி டால், தமிழில் நல்ல இசைப் பாடல்களை இயற்றுவதற்கான உருவ அமைதி பலவும் நமக்குக் கிட்டுமென்றே சொல்லலாம் , இங்கு அறிமுகப்படுத்தப் பெறும் காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி' என்ற நூல். எந்த ஆண்டில் எழுதி முடிக்கப் பெற்றது என்பதற்கான. . குறிப்பு எதுவும் இல்லை, ஏனக்குக் கிடைத்த 'அச்சுப் பிரதி, திருநெல்வேலி - வடுகக்குடி முடுக்குத் தெரு பழனிக் குமாரும் பிள்ளையவர்கள் குமாரர் சுப்பிரமணிய - பிள்ளையவர்கள் - வேண்டுகையின் பொருட்டு, திருநெல்வேலி மகாவித்வான் சாலிவாடீசுர ஓதுவா மூர்த்திய வர் களசல் பார்வையிடப்பட்டு, திருநெல்வேலி முத்தமிழாகர அச்சுக்கூடத்தில் அதை ய வருஷம் தை மாதம் - அதாவது 1927 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் - பதிப்பிக்கப்பட்டதாகும். இதற்கு முன்பும் இந் தால், மதிப்பிக்கப்பட்டதா என்று தெரிய வில்லை. என்றாலும் நூலிலுள்ள பாடல் ஒன்றில், பரிசுற்ற காந்திமதி அம்மையே! இந்தப் பன்னி ரண்டு வருஷத்துப் பஞ்சத்தை நீக்கி, அன்பாய் என் மை வாழ்விப்பையே! என்று அழகிய சொக்க நாத பிள்ளை பாடியுள்ளார். எனவே இந்நூல் தாது வருஷப் பஞ்சத்துக்குப்பின் (1875} பல ஆண்டுகள் கழித்து, அத்தப் பஞ்சம் ஓய்த்து வந்த பருவத்தில், அதாவது ஆசிரியரின் - அந்திமக் காலத்தையொட்டியே இயற்றப்பட்டிருக்க ஜாம் - என்று தெரிகிறது. இந்நூலில் அந்தாதித் தொடராக அமைந்த நூறு கலித்துறை விருத்தப் பாடல்கள் உள்ளன. முதல் தொண்ணூறு பாடல்களும் தாது விருஷப்பஞ்சத்தில் மக்கள் படும் பல்வேறு அவதிகளையும் திருநெல்வேலி நகரில் கோவில் கொண்டுள்ள- காந்திமதியம்மை யிடம் முறையிட்டுக் கொள்ளும் முறையிலும், இறுதிப் பத்துப்பாடல் களும் அந்த முறையீட்டைக் கேட்டு, அருள் புரிந்த காந்தியம்மை பின் சிறப்பையும், மக்கள் குறை தீர்ந்து வாழ்வதைம் கூறும் முறையிலும் அமைந்துள்ளன. இனி, நாம் நூல் வழங்கும் செய்திகள் சிலவற்றை அதன் வாயிலாகவே காண்போம்.