பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி கக்கள் போதாத கலி காலத்தையும், படைத்த பிரமனையும். அம்பிகையின் சோதனையையும் நொந்து, “தலைவிதியே!' என்று சலித்துக் கொண்டார்கள். பஞ்சத்தின் மூல காரணத்தை மட்டும்.. அதாவது அன்னிய ராட்சியின் சுரண்டலும் கொள்ளையும் கூட, அந்தப் பஞ்சத்தில் பெரும் பங்கு வகித்த காரணத்தை அவர்கள் உணரவில்லை ; அவர்களுக் காகப் பாட வந்த புலவரும் அதனை உணரவில்லை. என்றாலும் வாழ்க்கையில் படும் துன்பங்களை உணர்வதற்கு, அரசியல் ஞானம் தேவையில்லையே . அவை கண்" கண்ட உண்மைகள் ஆயிற்றே ! எனவே அவர்கள் தமது இல்லா- மையையே நொந்து கொள்கிறார்கள் : எல்லாரைப் போலவும் வைத்தனையோ ? எம்ல: ம் இவ்வுலகில் இல்லாளர் ஆக்கி, பசித்தோர்க்கு அனமிலை என்னச் செய்யும் இல்லாமை ஓன்று அதை இல்லாமை ஆக்குவது 'என்றைக்கு? அதும் சொல்லாதிருப்பதுவோ? நல்ல நீதி! உன் தொண்

  • உலகில் !!லரை இல்லாதவர்களாக்கி, அவர்களுக்கு உண்ண

உணவும் இல்லையென்று ஆக்கி வைத்திருக்கிறாயே ! இந்த இல்லாமை. என்னும் கொடுமையை இல்லாமற் செய்வது என்றைக்கு?' என்று புலவர் அம்பிகையிடம் கேட்கிறார். ஆனால், வறுமை என்ற இந்தக் 'குசேல வியாதியைப் போக்கும் சஞ்சீவி மனிதன் வசம் தான் உண்டு! (பக்த குசேலர்) என்று புதுமைப்பித் தன் எழுதியுள்ள உண்மையையோ, “இல்லையென்ற சொல்லை உலகில் இல்லையாக வைப்பேன்" என்று பாடிய பாரதியின் வைராக்கியத்தையோ அழகிய சொக்க நாதர் அறிந்திருக்க வில்லை. அவர் வாழ்ந்த சூழ்நிலையில் அதனை அறிந்திருக்கவும் வழியில்லை. எனவே இல்லாமை என்ற கொடுமையை மனித எத் தனத்தால் தான் ஒழிக்க முடியும் என்ற பிரக்ஞையற்று, அதனை ஒழிக்க அவர் தெய்வத்தின் அருளை நாடுகிறார். என்றாலும் அவரது விருப்பம் சரியானது தானே,