பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி 27 இவ்வாறு வறுமையில் வீழ்த்தப்பட்ட இல்லானர்.ற்றி நினைக்கின்ற புலவர் உழைத்தும் போதுமான கூலி கிட்டாமல், உண்ண உணவும் கிட்டாமல் வாடும் மக்களையும் எண்ணிப் பார்க்கிறார். அன்றாடம் காய்ச்சிகளும் அந்தக் கடலிகளுமான அந்த மக்கள் தமது பிழைப்பையும் இழந்து தவிக்கின்றனர். 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்'. அப்போது தொழில்கள் மட்டும் நிலைக்குமா என்ன ? கூலிக்கு வேலை செய்தே பிழைப்பவர் கொட்டை கள் நூற் றால் இக் குவலயத்தில் பிழைப்பு உண்டென்று உள்ளார்கள், உன் நெல் வேலிக்குள் இவ்விதம் பஞ்சம் கண்டால் எவ்விதம் பிழைப்பார் ? பாலிக்க வேண்டும் அம்மா! இந்த வேளைகண் பார்த்தருளே ! நெல் வயல்களால் சூழப் பெற்று அவையே வேலி, போல் இருப்பதால் திருநெல்வேலி எனப் பெயர் சி. பற்ற சீமையிலேயே பஞ்சம் என்றால், கூலி வேலை செய்பவர்களும்.. கொட்டை நூற்று ஆடை தெய்பவர்களும் எப்படிப் பிழைக்க முடியும் ? எனவே இந்தக் கொடுமையை நீக்க வேண்டும் என்று இறைஞ்சு கிறார் புலவர், அதே சமயம் அவருக்குத் தன் நினைவும் வந்து விடுகிறது. , ' செல்வம் நிறைந்தவர் கள் ஒரு பக்கம் ; 'வறுமைப் பட்டவர்கள் ஒரு பக்கம்' என்ற நிலையை .. உ.சர்ந்து ஏழை. மக்களுக்காக அனுதாபப்படும் புலவருக்கு இந்த இரு வேறு பிரிவினருக்கும் இடையே இரண்டும் கெட்ட ரின் நிலையிலுள்ள மத்திய தர வர்க்கத்தினரைப் பற்றிய நினைவு வந்து விடுகிறது. அதாவது கல்விச் செல்வம் இருப்பதால் பாமரர்களான ஏழை மக்களிடம் அண்டாமலும், பொருட் செல்வம் இல்லாமையால் பணம் படைத்தவர்களை அண்ட முடியாமலும் உள்ள நிலையி லுள்ள மத்தியதர வர்க்கத்தைப்பற்றிய, அதாவது தம்மைதம் தம் போன்றாரையும் பற்றிய உணர்வு புலவருக்கு வந்து விடுகிறது. எப்படி ?