பக்கம்:காந்தியடிகளும் ஆங்கிலமும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியடிகளும் ஆங்கிலமும் 42 போர் வெற்றி பெற நூற்றைம்பது ஆண்டுக் காலம் பிடித் தது. கட்டபொம்மன் பரம்பரை மறைந்து, 'தொண்டை மான்கள்' பரம்பரை பெருகலானது. சிலர், "சீர்திருத்தப் புரட்சி விளைவித்த ராம்மோக னரும், விடுதலைப் போரில் தளபதியாகத் திகழ்ந்த லோகமான்ய திலகரும், பிரிட்டிஷ் பேரரசைக் கதிகலங்க வைத்த காந்தியடிகளும் ஆங்கிலக் கல்வி முறை தந்த வீரர் கள் அல்லவா? என்று கேட்கின்றனர், இப்படிக் கேட்ப வர்களுக்கு அடிகளார் அளித்த பதில் வருமாறு: "என்னை ஒரு பொருளாகக் கொள்ள வேண் டாம்; நான் ஒன்றுக்கும் உதவாத துரும்பு. என்னை விட்டு விடுங்கள். திலகரையும், ராம் மோகனரையும் பற்றி இப்போது கவனிப்போம். ராம்மோகனரும் திலகரும் ஆங்கிலம் படியாது இருந்திருப்பார்களாயின் ஆங்கிலப் படிப்பு என்ற தொத்து நோய் அவர்களைப் பற்ற திருக் தால் - இன்னும் எவ்வளவோ பெரிய மகான் களாக அவர்கள் விளங்கியிருப்பார்கள். "மக்களுக்குப் பொதுவாக சைதன்யர், சங்கரர். குரு நானக் போன்றவர்களிடத்திலே என்ன ஈடுபாடு இருந்ததோ அந்த ஈடுபாடு ராம் மோ ஹனரிடத்திலும் திலகரிடத்திலும் இல்லை யென்றே சொல்லவேண்டும். இந்தப் பெரியார் களுக்கும் திலகர்-ராம்மோஹன் ஆகியோருக்கும் இடையிலுள்ள வேற்றுமை மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமைதான். சங்கரர் ஒருவர் மட்டும் சாதித்துள்ள காரியத்தை ஆங்கிலம் படித்தோ ரனைவரும் ஒன்று கூடினாலும் செய்ய முடியாது.