பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

அழைத்து, “கூலிச் சேரியில் கொள்ளே கோய் பரவியிருக் கிறது. அதல்ை அவதிப்படுபவர்கள் இந்தியர்கள். அவர் களுக்குத் தொண்டு செய்ய நான் செல்லுகிறேன். அப்பணி யில் உயிரை இழக்க நேர்ந்தாலும் நேரலாம். நீங்கள் என்னுடன் ஒத்துழைக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். அங் நண்பர்களும் மனமுவந்து அப்பணியை ஏற்றுக் கொண்டனர். காந்தியடிகளின் பொருட்டுத் தம் உயிரையும் அளிக்கச் சித்தமாக அவர்கள் இருந்தார்கள்.

இரவெல்லாம் கண்விழித்துத் தம் நண்பர்களுடன் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்தார். அவர்கள் ஆடை களேத் துய்மை செய்தார். நோயாளிகளுக்கு அடிக்கடி தைரியம் கூறி உற்சாகப்படுத்தினர். நகரசபையின் ஒத்துழைப்பைப் பெற்று அங்கோயைக் கூலிச் சேரியிலிருந்து விரட்டியடித்தார். அதன் பிறகு நகரசபையார் கூலிச்சேரி யின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டத் தொடங் கினர். காரணம், மீண்டும் கொள்ளே நோய் ஏற்பட்டு வெள்ளேயரையும் பற்றிக் கொண்டால் என்ன செய்வது என்ற அச்சம்தான்.


கம்மை அடிக்கும் ஒருவனத் திருப்பியடிப்பது மிகவும் எளிது. ஆனல் ஒருவன் அடிக்கும் போது அதைப் பொறுமையோடு ஏற்றுக் கொள்வது அரிது. அப்படி ஏற்றுக் கொண்டாலும் அடித்தவனே மன்னிப்பது மிக அரிது. மன்னிப்பதோடு அமையாமல் கமக்குத் துன்பம் செய்தவனுக்கு நன்மை செய்தல் மிக அரிது. இது யாரால் முடியும் மலேபோன்ற துன்பத்தையும் தாங்கும் எஃகு உள்ளம் படைத்த அஞ்சா கெஞ்சர்களால்தான் முடியும்: கோழைகளால் முடியாது.

காந்தியடிகள் அஞ்சா கெஞ்சர். அஞ்சாமையோடு அவர் விளங்கியதால்தான் பிறருடைய அச்சத்தைப் போக்க