பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

சமைத்து உண்டனர். கஸ்துாரிபாய்க்கும் அப்பணியில் பங்குண்டு. அவர் காந்தியடிகளுக்கும், குழந்தைகட்கும் இன்னும் பலருக்கும் உணவு சமைக்கும் பணியை மேற் கொண்டிருந்தார். ஏறக்குறைய காள் தோறும் முப்பது பேருக்குச் சமைக்க வேண்டும். முதியவராக இருந்தாலும் கஸ்துரிபாய் வேலையில் சுறுசுறுப்பாக இருப்பார். சமைய லறை அவர் ஆட்சிக்கடங்கிய மாநிலம். அதில் அவருடைய செங்கோல் தங்குதடையின்றி ஆட்சி புரியும்.

மற்ற சமையற் கூடத்திலிருப்பதைவிட இவருடைய கூடத்தில் வேலே எப்பொழுதும் அதிகமாக இருக்கும். சபர்மதி அரசியற் போராட்டத்தின் தலைநகரம். எதிர் பாராத விருந்தாளிகள் எப்போதும் வந்தவண்ணமிருப்பார் கள். கஸ்தூரிபாய் வேலைகளேயெல்லாம் முடித்துவிட்டுச் சோர்ந்து போய்த் தம் அறையில் உஸ்! அப்பாடா’ என்று தஅசாய்த்துக் கண்ணே மூடுவார். விழியை இமை கழுவும் நேரத்தில் ‘பா’ என்று கதவுக்குப் பக்கத்திலிருந்து மெல்லிய ஓசை வரும். (ஆசிரமத்தில் கஸ்தூரிபாயைப் பா’ என்றே எல்லோரும் அழைப்பர்) என்ன? என்று எரிச்சலோடு எழுந்து வருவார் அன்னேயார்.

காந்தியடிகள், புரவலன் வாயிலில் ஏங்கி விற்கும் இரவலன் போல் ஒடுங்கி கிற்பார். “எதிர்பாராத விருர் தாளிகள் வந்திருக்கிறார்கள். மூன்று பேருக்கு...” என்று இழுப்பார்.

“சமையலாக வேண்டும். அப்படித்தானே’ என்று வேகமாக முடிப்பார் அன்னேயார். காந்தியடிகள் புன் முறுவல் பூப்பார்.

அன்னேயார் பொறுமையை இழந்து விடுவார். சக்திக்குமேல் உழைக்க யாரால் முடியும்? சலிப்பு இருக் காதா என்ன?