பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I H 5

போகிறார்!’ என்று எண்ணினர். அப்படிப்பட்ட ஒருவர் அகப்படமாட்டார் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

ஆளுல் அங் கம்பிக்கை பொடிப் பொடியாகும் கிலே விரைவில் ஏற்பட்டது. இந்திய ஊழியர் கழக (Servants of India Society) உறுப்பினர்களில் திருவாளர் அமிருதலால் தக்கர் என்பவர் குறிப்பிடத்தக்கவர். (இன்றைக்கு அரிசனத் கொண்டுக்காகவே வாழும் தக்கர் பாபா தான் இவர்). காந்தியடிகள் பால் இவருக்கு அளவற்ற பற்றும், பெருமதிப்பும் உண்டு. ஒருநாள் திருவாளர் தக்கரிட மிருந்து காங்தியடிகளுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தக்கர்பாபா, “திண்டாவகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத் தார் தங்கள் ஆசிரமத்தில் சேர விரும்புகின்றனர். அவர் கக்ள ஏற்றுக்கொள்ளுவீர்களா?” என்று அதில் கேட்டிருந் தார். இவ்வளவு விரைவில் இத்தகைய சோதனை ஏற்படு மென்று காங்தியடிகள் எதிர்பார்க்கவில்லை. ஆசிரமம் கடை பெறுவதற்குப் பொருளுதவி செய்து வந்த ஆமதாபாத் கண்பர்களுக்கு இது பிடிக்காது என்று காங்தியடிகளுக்குத் தெரியும். அதற்காகத் தம் அடிப்படைக் கொள்கையைக் காங்தியடிகள் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை, அக் கடி தத்தை ஆசிரமத்தில் வாழ்ங்க மற்ற கண்பர்களுக்கும் படித்துக் காண்பித்தார். அவர்களும் இச் சோதனையை உற்சாகமாக வரவேற்றனர். இச் சமயத்தில்தான் அன்னே கஸ்தூரிபாய் தம் எதிர்ப்பைத் தெரிவித்தார். ஆனல் காங்தியடிகள் “உனக்காக என் கொள்கைகளே மாற்றிக் கொள்ள முடியாது. தீண்டாமைக் கொள்கையை கான் அறவே வெறுக்கிறேன். மக்களிடையே உயர்வு தாழ்வு எண்ணும் பழக்கம், ஆசிரமத்தில் தலைகாட்டுவதை நான் விரும்பவில்லை. இக் கொள்கைக்கு உட்பட்டு நீ வாழ விரும் பினல் ஆசிரமத்தில் இருக்கலாம். இல்லாவிட்டால் இராச கோட்டை சென்று, நீ உன் ஆசாரத்தோடு வாழலாம்”