பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

“அப்படியானல் காளே இதே நேரத்திற்குப் பணத் தோடு வருகிறேன்” என்று கூறிவிட்டு அந்தச் செல்வர் சென்று விட்டார்.

அடுத்த நாள் கால அதே நேரத்தில் கார் வந்தது. காரின் ஒலியைக் கேட்டதும் அடிகள் வெளியில் வங்தார். அச் செல்வர் காரைவிட்டு இறங்கவும் இல்லை; ஆசிரமத்தை சுற்றிப்பார்க்கவும் இல்லை. காரில் இருந்தபடியே ரூ. 18,000 மதிப்புள்ள கோட்டுக்களை அடிகளின் கையில் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். காங்தியடிகளுக்கு அந்தச் செல்வரைப்பற்றி ஒன்றும் தெரியாது. முன்பு எங்கோ ஒரு தடவை பார்த்திருப்பதாக அடிகள் எண்ணினர். அந்த நண்பரும் தம்மைப்பற்றி எதுவும் சொல்லவில்லை.


ஒரு சிற்றுாரில் கூட்டத்திற்கு ஏற்பாடாகியிருந்தது. காந்தியடிகள் அதில் பேச இருந்தார். காங்தியடிகளைத் தரிசிக்கவும், அவர் அமுத மொழிகளைச் செவி மடுக்கவும் அவ்வூரிலுள்ள மக்களெல்லாரும் கூடியிருந்தனர். உயர் குலத்தோரெல்லாம் அங்கு திரளாக வந்திருந்தனர். காந்தி யடிகள் வருகிறார் என்று கேள்விப்பட்டதும், அவ்வூரில் வாழ்ந்த பள்ளர், பறையர், சக்கிலியர் முதலிய தாழ்த்தப் பட்ட மக்களும் ஆவலோடு வங்திருந்தனர்.

தாழ்த்தப்பட்ட மக்களைக் கண்டதும் உயர் குலத் தாருக்குச் சினம் பொங்கி யெழுந்தது. “யாராடா நீங்கள்? தாழ்த்தப்பட்டவர்களா? உங்களுக்கு இங்கென்ன வேலை? உங்களை யார் அழைத்தது? மரியாதையாகச் சென்று விடுங்கள். பள்ளு பறைக்குப் பொதுக்கூட்டம் ஒரு கேடா” என்று, சுடுசொற்களே அள்ளி வீசினர்.

பாவம்! அத்திண்டாதாருக்குத் துணையாகப்பேச அங்கு யாருமில்லை. ‘எசமான்களே! எங்களுக்கும் இடங்கொடுங் கள். காங்தியடிகள் எங்களுக்கும் உரியவர்தானே. அவரைக்