பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 22

“கலகம் நேர்ந்தால் எ ன் ன செய்வீர்?’ என்று கேட்டார் மகாத்மா,

‘கலகம் நேர்ந்தாலும் நேரட்டும். அதற்காக நாம் என்ன செய்வது?’ என்றார் வந்த மனிதர்.

அது சரியான கொள்கை அல்ல, என்பதை மகாத்மா அவருக்கு எடுத்துக் காட்டினர்.

‘திண்டாமை பெரிய அநீதிதான். இந்துக்களில் ஒரு பகுதியாரை ஆலயங்களில் விடுவதில்லை என்பது பெருங் கொடுமைதான். ஆனல் அதிேயையும் கொடுமையையும் பலாத்காரத்தால் போக்க முடியாது. தீண்டாமை ஒழிய வேண்டுமானல், சாதி இந்துக்களின் மனம் மாறவேண்டும். பலாத்காரத்தால் சாதி இங்துக்களின் மனதை மாற்ற முடியாது. அதல்ை வெறுப்பும் பகையும் தான் அதிக மாகும். ஆகையால் ஆலயங்களுக்குள் போவதாயிருந்தால், இரண்டு பேர் அல்லது மூன்று பேராகப் போங்கள். பலாத்காரத்தைக் கையாள வேண்டாம். அதிகாரிகள் சிறைக்கனுப்பினல் அமைதியோடு செல்லுங்கள். இது தான் சரியான முறை. இப்போது நான் இங்தியாவின் விடுதலையைக் கருதி ஒத்துழையாமை இயக்கத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு நீங்கள் கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் தேச விடுதலை இயக்கம் முடிவடைந்த பிறகு நானே ஆலயப்பிரவேச இயக்கத்தை முன்னின்று கடத்து வேன்’ என்றார் காங்தியடிகள்.

பின்னல் ஒத்துழையாமை இயக்கத்தை கிறுத்திவைக்க நேர்ந்தபோது, காங்தியடிகள் திண்டாமை விலக்கிலும், ஆலயப் பிரவேசத்திலும் தம் முழுக் கவனத்தையும் செலுத் தினர். ஈரோட்டில் அப்பொழுது சிறந்த காங்கிரஸ் தலைவ ராக விளங்கியவர் பெரியார் ஈ. வெ. இராமசாமி. செல்வர்; பெருவணிகர்; பல துறையிலும் அரசியற் பணியாற்றி வந்தவர். காந்தியடிகள் கதர்த் திட்ட ம் துவங்கியபோது,