பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

கள் என்று எதிர்பார்த்தேன்’ என்று அடிகள் வந்தவரிடம் கூறினர்.

“ஆமாம்! தங்களுடைய அநுமதியைப் பெற்ற பிறகு தான் நான் இங்கு வந்திருக்க வேண்டும். போருக்குப் பின் தாங்கள் வைசராயைச் சங்தித்து வெளியிட்ட துக்ககரமர்ன அறிக்கையைச் செய்தித்தாளில் படித்தேன். உங்களைக் கண்டு உங்களோடு இரண்டு நாள் தங்கியிருந்து விட்டுச் செல்லலாமென்ற ஆசை என் உள்ளத்தில் எழுந்தது. உங்களைக் காணவேண்டுமென்று என் உள்ளத்தில் எழுங்த ஆவலே என்னல் அடக்கிக்கொள்ள முடியவில்லை. உடனே அரித்துவாரத்தை விட்டுப் புறப்பட்டு வந்துவிட்டேன்’ என்று வந்தவர் கூறினர்.

‘நீங்கள் என்ன நோயில்ை வருக்திக் கொண்டிருக் கிறீர்கள் என்று நான் அறிவேன். ஆடவரும், பெண்டிரும். குழங்தைகளும் கிறைய இருக்கும் இந்த ஆசிரமத்தில் தங்களேயும் ஏற்றுக்கொள்வது பற்றி இன்னும் கான் முடிவுக்கு வரவில்லை. அவ்வெண்ணம் என்னுள்ளத்தில் ஒரு போராட்டமாகவே இருந்து வருகிறது” என்று காங்தி யடிகள் கூறினர்.

வந்த மனிதர், திருவாளர் பார்ச்சூர் சாஸ்திரி என்பவர். இவர் 1933-ஆம் ஆண்டு காந்தியடிகளோடு எரவாடா சிறையில் இருந்த தேசியத் தொண்டர். சிறையிலிருந்து வெளிவந்ததும், கொடியதொரு நோய் அவரைப் பற்றிக் கொண்டது. அவர் வட இந்தியாவிலுள்ள சிறந்த மருத்துவ மனைகட்கெல்லாம் சென்று மருத்துவம் செய்து கொண் டார். நாள் ஆக ஆக நோய் வளர்ந்ததே தவிரக் குறைய வில்லை. கடைசியாக இந்தியாவின் சிறந்த புண்ணியத் தலமான அரித்துவாரத்தை அடைக்கலமாக அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார்.