பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மையில் வெளியில் சென்று உலாவும் அளவுக்குச் சாஸ்திரி யார் உடல் கிலே தேறியது. சாஸ்திரியார் உலாவிவிட்டு வழக்கமாக ஒரு இடத்தில் களேப்பாறுவதற்காக உட்காரு வது வழக்கம். காங்தியடிகளும் அப்பொழுது உலாவிவிட்டுக் திரும்புவார். சாஸ்திரியாரிடம் சிறிது கேரம் அமர்ந்து சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். அடிகளின் பேச்சிலும், கண் களிலும் மிளிரும் கருணை வெள்ளத்தில் சாஸ்திரியார் மூழ்கித் திணறுவார்.

வாரம் ஒரு முறை அடிகள் பேசா விரதம் மேற்கொள் வதுண்டல்லவா? அங்காட்களில் சாஸ்திரியாரின் உள்ளத்தை எவ்வாறு மலர்விப்பது என்று அடிகள் சிங்தித்தார். அடி களின் அன்புமொழிகளைக் கேட்காவிட்டால், சாஸ்திரி யாருக்கு அன்று ஒரு பேரிழப்பாகும். அவருடைய பேச்சுத் தானே சாஸ்திரியாரின் மருந்து! அடிகள் அன்று ஒரு புதிய வழியைக் கையாண்டார். காலேயில் எழுங்ததும் பழ மரத்தின் அருகில் சென்று புதிதாகப் பழுத்த ஆரஞ்சுப் பழ மொன்றைப் பறித்துக் கையில் எடுத்துக் கொள்வார். பிறகு சாஸ்திரிகளை கோக்கிச் செல்வார். புன் முறுவலோடு அப்பழத்தைக் கொடுப்பார். ஆர்வம் பொங்க சாஸ்திரியார் அப்பழத்தை வாங்கிக் கொள்வார். கண்களாலேயே காங்தி மருத்து வரும் நோயாளிக்கு அன்பு மருங்தை வழங்கு வார். அவரும் கண்களாலேயே ஏற்றுக் கொள்வார். காதலர்களும் பேசிக் கொள்ளமுடியாத அரிய கருத்துக்களே கண்களால் அவ்விருவரும் அன்று பேசிக் கொள்வர் காங்தி யெனும் சாங்த ஒளி, தன் அருட்சுடரைப் புன்னகையால் வீசிவிட்டுப் புறம்போகும்.


தென்னப்பிரிக்காவில் 1899-ஆம் ஆண்டில் போயர் போர் தொடங்கியது. ஹாலந்து தேசத்திலிருந்து தென்னுப் பிரிக்காவில் போய்க் குடியேறியவர்கள் போயர்கள் என்று