பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 2

அவர் உள்ளம் பெரிதும் வருந்தியது. ஏதோ செய்தற்கரிய மாபெரும் பாவத்தைச் செய்து விட்டதாகக் காங்தியடிகள் எண்ணினர். உடனே வண்டியைவிட்டுக் கீழே இறங் கினர். மாட்டை அவிழ்த்து விட்டுவிட்டு, வண்டியின் நுகத்தைத் தம் கழுத்தில் மாட்டிக் கொண்டார். அம் மாடு தம்மை எங்கிருந்து இழுத்து வந்ததோ அதுவரை வண்டி யைத் தாம் இழுத்துச் சென்றார். இச்செயல், ஆராய்ச்சி யில் ஈடுபடுவாருக்குக் கேலியாகத் தென்படலாம். வண் டியை அடிகள் இழுத்துச் சென்றதால் மாட்டின் நோய் தீர்ந்து விடுமா? என்று கேட்கலாம். இங்கு காரணகாரிய வாதத்திற்கு இடமில்லை. வண்டியை இழுத்துச் சென்ற தன் மூலம் தம்முடைய பாவத்திற்குக் கழுவாய் தேடிக் கொண்டாத அடிகளின் உள்ளம் எண்ணியிருக்கலாம்.

- #:

காந்தியடிகளின் அருளுள்ளம் எவ்வளவு பரந்தது என்பதற்கும், அருளுக்கு எத்தகைய ஆற்றல் இருக்கிறது என்பதற்கும் அடிகளின் வாழ்க்கையிலிருந்தே ஒரிரு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

காந்தியடிகள் முதன் முதலாக 1933-ஆம் ஆண்டு இந்தியாவில் சிறைப்படுத்தப்பட்டு எரவாடா சிறையில் வைக்கப்பட்டார். காங்தியடிகள், இந்து முஸ்லீம் ஆகிய இரு இனத்தாராலும் பெரிதும் விரும்பப்படுகிறார் என்ற உண்மையை நன்கு உணர்ந்திருந்த வெள்ளேக்காரச் சிறை யதிகாரி, மொழியறியா ரீக்ரோ ஒருவனேக் காங்தியடி களுக்குத் துணையாக அனுப்பியிருந்தார். அவனும் ஒரு கைதி. அவனுக்கு ஆங்கிலமும் தெரியாது; இந்துஸ்தானியும் தெரியாது. மொழி தெரியாத ஒருவனைத் துணைவனுக அனுப்பினுல், ஆங்கில ஆட்சியின் பயங்கரப் பகைவரான காங்தியடிகள், தம் செல்வாக்கை அவன்மீது செலுத்த முடி யாது என்று எண்ணினர் அந்தச் சிறையதிகாரி. வேற்று