பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

கொலையும் செய்திருக்கலாம். அக்குற்றவாளியின் உறவினர் காங்தியடிகளிடம் ஓடி வந்தனர். அவனே எவ்வாறேனும் விடுதலை செய்யவேண்டும் என்று வேண்டினர். காந்தியடி களும் ஆவன செய்வதாகக் கூறினர். அப்போது கொலைஞர் களைப் பற்றிக் காந்தியடிகள் பின்வருமாறு கூறினர்.

“கொலையாளிகளும் மன்னிக்கத்தக்கவர்களே. கொடிய கொலைஞர்களாக இருங்தாலும், அவர்களைக் கொல்வதை கான் விரும்பவில்லை. மிகவும் அஞ்சத்தக்க கொலைஞர்கள் பலர் என்னுடைய ஆசிரமத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனல் அவர்களெல்லாம் திருந்தி, இன்று அஹிம்சாவாதிகளாக விளங்குகின்றனர்” என்று கூறினர். காங்தியடிகளின் அருளறம் எங்த அளவு பரங்தது என்பதை இதல்ை அறியலாம்.

6. சமயம்

தமக்குச் சமயத்தைப்பற்றிய சிந்தனைகள் எப்பொழுது தோன்றின என்பது பற்றிக் காந்தியடிகள் சமயத் தோற்றங்கள்’ என்ற தலைப்பில் தம் நூலில் குறிப் பிட்டுள்ளார். அத்தலேப்பின் கீழ், இளமைக் காலத்தில் தம் உள்ளத்தில் ஏற்பட்ட கிலேயற்ற சமயக்கருத்துக்களைப் பற்றிக் கூறிக்கொண்டு செல்கிறார். பள்ளியில் சமயத்தைப் பற்றி எதுவும் அக்காலத்தில் சொல்லிக் கொடுக்கப்படா ததைப் பெரும் குறையாக எண்ணுகிறார். காந்தியடிகள் குசராத்தி நாட்டு மோடபனியா வகுப்பைச் சார்ந்தவ ரென்றும், அவ்வகுப்பினரெல்லாம் வைணவ சமயத்தில் பெரும்பற்றுக் கொண்டவர்களென்றும் முதலிலேயே குறிப் பிட்டேன். அக் குலவழக்கத்திற்கேற்பக் காங்தியடிகளும் வைணவ சமயத்தின் பால் இளமையிலேயே பற்றுகொண்டு விளங்கினர். அடிகளுக்குப் பேய் பிசாசுகளைப் பற்றிய அச்சம் இளமையில் இருந்தது. அவ்வச்சத்தைப் போக்கிக்