பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

கொடுத்தார். விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டில் (New Testament) o Giror “undo 3 GertGutrula” (Sermons on the Mount) -91.3 asso a girar305.3 G. If தும் கவர்ந்தது. எட்வின் ஆர்னல்டு எழுதிய ஆசிய சோதி” (Light of Asia) என்ற நூலையும், கார்லேல் என்பார் எழுதிய வீரரும் வீர வழிபாடும் என்ற நூலையும் காந்தி யடிகள் படித்தார். ஆசிய ஜோதி புத்தரின் வரலாற்றை விளக்கும் நூல். வீரரும் வீர வழிபாடும் பெரியோர்களின் வாழ்க்கை வரலாற்று நூல். அதில் எழுதப்பட்டிருந்த மகம்மது நபியின் வாழ்க்கை வரலாறு காங்தியடிகளின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. அக்காலத்தில் சார்லஸ் பிராட்லா என்ற பேரறிஞர் இங்கிலாந்தில் வாழ்ந்தார். அவர் பெரிய நாத்திகர். காத்திக சமயத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, அவர் எழுதிய நூல்களையும் அடிகள் படித்தார். இவ்வாறு பல சமயங்களைப் பற்றியும் நன்கு அறிந்து கொண்டார்.

காங்தியடிகளுக்கு தென்னப்பிரிக்காவில் பல கிருத்தவ நண்பர்கள் ஏற்பட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கள் திருவாளர் பேகர், ரெவண்ட் ஆண்ட்ரூ, திருவாளர் டோக், திருவாளர் போலக், திருவாளர் காலன்பேக் என்பவர்கள். இந்தியாவில் அடிகளின் சிறந்த நண்பரான தினபங்து ஆண்ட்ரூசை அறியாதார் யார்? பிரெஞ்சு நாட்டு பேரறிஞரும், அடிகளைப் பற்றி அரிய நூல் எழுதியவரு மான ரோமன் ரோலண்டு கிருத்தவரே. அடிகளின் அடித்தொண்டராய்ப் பணியாற்றி வந்த மீரா பெண்’ என்பவர், ஆங்கில காட்டைச் சேர்ந்த கிருத்தவப் பெண் மணியே ஆவார். தென்னுப்பிரிக்காவில் வாழ்ந்த கிருத்தவ நண்பர்கள், காங்தியடிகளே எவ்வாறேனும் கிருத்தவ சமயத்தில் சேர்த்துவிடவேண்டுமென்று பெரு முயற்சி செய்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மர்ரே பாதிரி யார். அவர் அடிகளைக் கிருத்தவசமய மாநாடுகட்கெல்லாம்