பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

அல்லா என்பார் சிலபேர்கள் அரனரி என்பார் சிலபேர்கள் சொல்லால் விளங்கா நிர்வாணம் என்றும் சிலபேர் சொல்வார்கள் எல்லாம் இப்படிப் பலபேசும் ஏதோ ஒருபொருள் இருக்குமன்றாே? அந்தப் பொருளை நாம் நினைந்து அனைவரும் ஒன்றாய்க் குலவிடுவோம்.

so so

தெய்வம் பலபல சொல்லிப்-பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்; உய்வ தனைத்திலும் ஒன்றாய்-எங்கும்

ஓர்பொரு ளானது தெய்வம். தீயினைக் கும்பிடும் பார்ப்பார்-நித்தம் திக்கை வணங்கும் துருக்கர்; கோயிற் சிலுவையின் முன்னே-நின்று

கும்பிடும் ஏசு மதத்தார். யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம்: பாருக்குள்ளே தெய்வம் ஒன்று-இதில்

பற்பல சண்டைகள் வேண்டாம்.

இப்பாடல்கள் முறையே காமக்கல் இராமலிங்கம் பிள்ளையவர்களாலும், தேசிய கவி சுப்பிரமணிய பாரதி யாராலும் பாடப்பட்டவை; இப்பாடல்களில் கூறப்படும் கடவுட் கொள்கை, காங்தியடிகளுக்கு அரனும் ஒன்றுதான்: அல்லாவும் ஒன்றுதான். பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவும், பரங்தாமனும் ஒன்றே. குறளும் குரானும், கீதை யும் கிருத்தவ வேதமும் அவர் சமய நூல்களே. இக்துக் களும், இசுலாமியர்களும், கிருத்தவர்களும் அவர் உடன் பிறந்தவர்களே. இராமனுக்கும் இரகீமுக்கும் அவர் வேறு