பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 45

பாடு கண்டறியார். ஈஸ்வர அல்லா தேரே காம் (ஈசுவரன் அல்லா என்பதெல்லாம் உம்பெயரே) என்பது அவர் வழி பாட்டுப் பாடல். இவர் தென்னப்பிரிக்காவில் வாழ்ந்த போது மாதாகோவிலுக்கும் மசூதிக்கும் செல்வார்.

காங்தியடிகள் தம்மை எப்பொழுதும் அரசியல் வாதி என்று கூறிக் கொள்ளமாட்டார். சமயவாதி என்றே குறிப்பிடுவார். தம் வாழ்வில் கடத்திய அரசியல் போராட். டங்களையெல்லாம் சமயத்தொண்டாகவே அவர் குறிப்பிடு வார். சத்தியாக்கிரகத்தை ‘வேள்வி’ என்பார். கம்காட்டின் சமயத்தைப்பற்றி, கன்குணர்ந்து கொள்ளாதவன், மக் களுக்கு உண்மையான அரசியல் பணியைச் செய்ய முடி யாது’ என்று அடிக்கடி கூறுவார். அரசியலேச் சமயக் கண் கொண்டு பார்க்கும் அடிகளின் கொள்கை, பல அரசியல் வாதிகளுக்குப் பிடிக்கவில்லை. பண்டித நேருகூட, காங்தி யடிகளின் இக் கொள்கை எனக்குப் பிடிக்கவுமில்லை; புரியவுமில்லை என்று பல இடங்களில் கூறியிருக்கிறார். அரசியல் காரணங்க்ளுக்கு மட்டுமல்லாமல், இயற்கையின் கொடுமைகளுக்குகூடச் சமயத்தையே அடிகள் சான்று காட்டிப் பேசுவார்.

ஆனல் காலம் செல்லச் செல்ல அடிகளின் கொள்கை இந்திய அரசியல் வாதிகளுக்குப் பழகிப் போய்விட்டது. இது சிறந்த ஒரு கொள்கையாகவும் பட்டது. காந்தியடி களின் சமயக் கொள்கைகள் வெறும் ஆன்மீகத்தின் அடிப் படையில் மட்டும் அமையாமல், சமூகம், அரசியல், பொருளி யல் ஆகிய பலவற்றின் அடிப்படையில் அமைந்தவை. அத் தகைய அடிப்படைகளே அமைத்துக் கொடுத்தவை, பல அரிய நூல்களாகும். ஆன்மீக அடிப்படையை அமைத்துக் கொடுத்த நூல்கள் கீதையும் விவிலியமும் ஆகும். அடி களின் அரசியல், பொருளியல், சமூகவியல் ஆகிய அடிப் படைகளே அமைத்துக் கொடுத்தவைகள், அன்னகிங்ஸ் போர்டு என்பார் எழுதிய கேரிய வழி (The Perfect Way)