பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 53

அடிகள் வழக்கறிஞர் கல்வி பயில்வதற்கு இங்கிலாங் திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவருடைய தாயார் மூன்று வாக்குறுதிகளே அடிகளிடம் பெற்றார். அவற்றில் “புலாலத் தொடுவதில்லை என்பதும் ஒன்று. காந்தியுடிகள் போகும் போது, இனிப்புப் பண்டங் கள் கிறையக் கொண்டு சென்றார், கப்பலில் அவற்றையே உணவாகக் கொண்டார். கப்பலில் செல்லும் போதே, புலால் உணவின் இன்றியமையாமையைப் பற்றிப் பல கண்பர்கள் எடுத்துக் கூறத் தொடங்கினர். புலால் உணவின்றி. இங்கிலாந்தில் வாழ்க்கை கடத்துவது முடியாத காரியம் என்றனர்.

காந்தியடிகள் இலண்டன் சென்றவுடன் மரக்கறி உணவிற்காக அரும்பாடு பட்டார். ஒருவேளை மரக்கறி உணவிற்குப் பல கல் தொலைவு கடக்கவேண்டி யிருந்தது. வெறும் ரொட்டித் துண்டை மட்டும் தின்று உயிர் வாழ்வ தென்பது முடியாதல்லவா? மரக்கறி உணவுச் சாலையைத் தேடிப் பலநாள் அலேங்து இறுதியில் பாரிங்டன் தெருவில் இருந்த சைவ உணவுச்சாலை ஒன்றைக் கண்டுபிடித்தார். ஒரு குழங்தை தன் மனதிற்கினிய பொருளைக் கண்டவுடன் எவ்வாறு பெருமகிழ்ச்சிகொள்ளுமோ அது போல் பேருவகை கொண்டார்; வயிருர உண்டார். அக்கடையில் விற்பக்ணக்காகப் பல நூல்களும் வைக்கப்பட்டிருந்தன. மரக்கறி உணவின் மேன்மையைப் பற்றித் திருவாளர் Gri Grair, Irif grap$u ‘Plea for Vegetarianism’ என்ற நூலும் அங்கிருந்தது. அங் நூலே வாங்கிப் படித்தார். பிறகு ஹோவார்டு வில்லியம்ஸ் என்பார் எழுதிய உணவின், -snspui’ (The Ethics of Diet) gra& D E7a'ayuh -syzirg) கிங்ஸ்போர்டு என்பார் எழுதிய உணவுக் கொள்கையில் Gofu sus’ (The Perfect Way in Diet) argiro sorough, மரக்கறி உணவின் மேன்மைகளே வற்புறுத்தும் வேறு பல சிறந்த நூல்களையும் காந்தியடிகள் படித்தார். இவ்வளவு

ம. 10