பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 54

நாட்களாக அன்னைக்கு அளித்த வாக்குறுதியைக் காப் பாற்றுவதற்காக அடிகள் புலால் உணவை நீக்கி வந்தார். பிறகு புலால் மறுத்தல் அவர் உள்ளத்திற்கு உகந்த கொள்கையாகவே மாறிவிட்டது.

இங்கிலாந்திற்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர் களெல்லாம், உணவு விடுதியில் தங்கினல் கிறையப் பொருட் செலவு ஏற்படுகிறது என்ற காரணத்தால், ஏதேனும் ஒரு ஆங்கிலக் குடும்பத்தில் தங்கிப் படிப்பது வழக்கம். காந்தி யடிகளும் அவ்வாறே ஒரு ஆங்கிலக் குடும்பத்தில் தங்கிக் கல்வி கற்றுவந்தார். ஆல்ை உணவுப்பிரச்சனை அடிகளுக் குத் துன்பத்தைத் தரக்கூடியதாக இருந்தது. உப்பு, மசாஆல முதலியன கலவாமல் வேகவைத்த கறி வகைகள் அவருக்குச் சுவைக்கவே இல்லே. இவர் தங்கியிருந்த வீட்டுக் காரி, இவருக்கு என்ன உணவு தயார் செய்வது என்று தெரியாமல் திகைத்தாள். காலை வேளையில் ஒட்பில்’ என்னும் தானியத்திலான கூழ் அளிக்கப்பட்டது. இது கூடியவரை போதுமானதா யிருந்தது. ஆல்ை இடை வேளையிலும் மாலையிலும் அரைப் பட்டினியாகவே இருந்து வந்தார். நடுப்பகல் சிற்றுண்டிக்கும், மாலே உணவுக்கும் பசஆலக் கீரையும் ரொட்டியும் அளிக்கப்பட்டன. காங்தி யடிகள் நன்றாகச் சாப்பிடக் கூடியவர். ஆனல் இரண்டு மூன்று ரொட்டித் துண்டுகளேவிட அதிகமாகக் கேட்க அவருக்கு வெட்கமாக இருந்தது. இத்துடன் இவ்விரு வேளைகளிலும் பால்கூடக் கிடையாது.


மரக்கறி உணவுக் கொள்கையின் காரணமாக அடிகள் இங்கிலாந்தில் பலவிதத் தொல்லகட்கு ஆளாக வேண்டி நேரிட்டது. அவருடைய நண்பர்கள் அவரைப் படித்த முட்டாள் என்றும், பிடிவாதக்காரன் என்றும் கேலி செய்தனர். ஒரு நண்பர், “ர்ே என் உடன் பிறந்தவராக