பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

காக வாயிலில் காத்திரும்’ என்று சினங்துரைத்தார் நண்பர். அடிகளும் அவமானத்துடன்-ஆளுல் மகிழ்ச்சி யுடன் வெளியேறினர்.


ஒரு மாணவன் இங்கிலாந்தில் வழக்கறிஞர் பட்டம் பெறுவதற்கு முன் இரண்டு கிபந்தனைகளுக்கு உட்படுதல் வேண்டும். மாணவர்களும் அவர்களுக்குப் பட்டம் வழங்க வேண்டியவர்களான பாரிஸ்டர் நீதிபதிக் குழுவினரும் சேர்ந்து உணவருந்தும் விருந்துகளுக்குச் செல்லுதல் ஒன்று; தேர்வுகளில் தேருதல் மற்றாென்று. ஒவ்வொரு மூன்று மாதத்திலும் 24 விருந்துகள் கடைபெறும். இவற்றுள் குறைந்தது ஆறு விருந்துகளுக்காவது ஒவ்வொரு மானக் கனும் செல்ல வேண்டும். இவ்வாறு மொத்தம் மூன்றாண்டு கள் விருந்துண்ண வேண்டும். விருங்துக்குச் செல்பவர்கள் சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை. குறிப் பிட்ட நேரத்தில் சென்று விருந்து முடியும் வரை இருந்தால் போதும். ஆனல் நல்ல உணவுப் பண்டங்களும், உயர்ந்த மது வகைகளும் அளிக்கப்பட்டபடியால், சாதாரணமாக எல்லோரும் வயிறு கிறைய உண்டு குடித்தலே வழக்கம் ஒவ்வொரு விருந்துக்கும் இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரையில் கொடுக்கவேண்டி யிருந்தது. இத் தொகை குறைவானதென்றே கருதப்பட்டது. ஏனெனில் உணவு விடுதிகளில் உண்டால் மதுவகைகளுக்கே அவ்வளவு தொகை கொடுக்கவேண்டி யிருக்கும். அநேகமாக இவ் விருந்துகளில் காந்தியடிகள் ஒன்றும் சாப்பிடுவதில்லை. ரொட்டி, வேக வைத்த உருகாக்கிழங்கு முட்டைக்கோசு என்னும் கீரை ஆகியவற்றையே காங்தியடிகள் உண்பார். துவக்கத்தில் இவைகள் அடிகளுக்குப் பிடிக்காத காரணத் தால், அவற்றையும் கூடச் சாப்பிடுவதில்லை. பின்னல் அவை அவருக்குச் சுவைக்கத் தொடங்கியதும், வேறு உணவுப் பொருட்களைக் கேட்கவும் அவருக்குத் துணிவுண்டாயிற்று.