பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவை விட பாசிஸ்டர்-நீதிபதி கூட்டத்துக்கு அளிக்கப்பட்ட உணவு உயர்ந்தது. காங்தியடிகளோடு மரக்கறி உண்பவரான பாரசீக நண்பர் ஒருவரும் இருந்தார். இவ்விருவரும் சேர்ந்து, பாரிஸ்டர்-நீதிபதிக் கூட்டத்துக்கு அளிக்கப் பட்ட சைவ உணவுப் பண்டங்களில் சில தங்களுக்கும் தரும்படி கேட்டார்கள். அவர்களுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பயனகப் பழங்களும், இன்னும் சில கறி வகைகளும் கிடைத்தன.

விருந்தில், நான்கு பேருக்கு இரண்டு மது புட்டிகள் வீதம் கொடுக்கப்பட்டன. அடிகள் மது அருங்தாதவராத லால் அவர்ையும் தங்கள் தங்கள் கோஷ்டியில் சேர்ந்து கொள்ளும்படி எல்லோரும் வற்புறுத்துவார்கள். ஏனெனில் மற்ற மூவரும் சேர்ந்து இரண்டு புட்டிகளைக் காலி செய்து விடலாமல்லவா? மூன்று திங்கள்களுக் கொருமுறை கடக்கும் சிறப்பு விருந்துகளில், சாதாரணமாகக் கொடுக் கப்படும் மதுவகைகளோடு சாம்பேன் முதலிய உயர்ந்த மதுவகைகள் அதிகப்படியாக வழங்கப்படும். அத்தகைய நாட்களில் அடிகளுக்குக் கிராக்கி அதிகம்.


காங்தியடிகளுக்கு ஆங்கிலக் குடும்பத்தின் உணவு சரிபட்டுவராத காரணத்தாலும், போதிய அளவு கிடைக் காத காரணத்தாலும், அவர் அங்கிருந்து விலகிக் கொண் டார். பிறகு ஒர் அறையைக் குடிக்கூலிக்கு எடுத்துக் கொண்டு, தாமே சமைத்து உண்ணத் தொடங்கினர். இலண்டன் மாககரிலிருந்த மரக்கறி உண்பவர் கழகத்’ தோடு அதிகத் தொடர்பு கொண்டார். அக் கழகத்தின் செயலாளராகவும் பணியாற்றினர்.

மேலைநாட்டு மரக்கறி உணவாளர், முட்டையைச் சைவ உணவே என்று முடிவுகட்டியிருந்தனர்; எல்லோரும் சாப்பிட்டனர். முட்டை மரக்கறி உணவாகவும் இருக்க