பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. I

பாயைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்து வந்தனர். இனி ஒன்றும் கவலையில்லே என்ற கிலே ஏற்பட்டதும், கஸ்தூரிபாயை மேற்படி மருத்துவரின் பொறுப்பில் விட்டு விட்டு ஜொகன்னஸ்பர்க் சென்றார் அடிகள்.

ஆனல் சில காட்களில் கவலைக்கிடமான செய்தி வங்தது. கஸ்தூரிபாய் மிகவும் வலி விழங்து, படுக்கையில் எழுங்து உட்காரவும் முடியாத நிலையை அடைங்திருக் கிறார் என்று தெரிந்தது. மருத்துவர், தொலே பேசியின் மூலம் காந்தியடிகளைக் கூப்பிட்டு, கிலேமை கெருக்கடியாக இருக்கிறது. கோயாளிக்கு மாட்டிறைச்சிச் சாறு உடனே கொடுத்தால்தான் பிழைப்பார், அதற்குத் தங்கள் இசைவு வேண்டும்” என்றார். மது, புலால் பற்றிக் காந்தியடிகளின் கடுமையான கொள்கையை உணர்ந்திருந்தபடியால், மருத் துவர் இந்த இசைவைக் கேட்டார்.

அடிகளோ, “நான் அத்தகைய இசைவைக் கொடுக்க முடியாது. கஸ்தூரிபாயையே கேளுங்கள். அவள் சிங்தித் துப் பதில் சொல்லக்கூடிய நிலையில் இருந்தால் அவள் விருப்பம்போல் செய்யுங்கள்!’ என்றார்.

‘அதெல்லாம் முடியாது. நோயாளியின் விருப்பத்தைக் கேட்பது தவறு. என் விருப்பப்படி உணவு கொடுக்கக் கூடாது என்றால் கோயாளியின் உயிருக்கு நான் பொறுப் ப:ளரியல்லன். உடனே தாங்கள் புறப்பட்டு வந்து பொறுப்பை ஏற்றுக் கொள்ளவும்” என்றார் மருத்துவர்.

காந்தியடிகள், அடுத்த வண்டியில் புறப்பட்டு டர்பனுக்குப் போனர். மருத்துவரைப் பார்த்ததும் ‘கஸ்தூரிபாய் விரும்பிலைன்றி அவளுக்கு மாட்டிறைச்சிச் சாறு கொடுக்க கான் ஒருநாளும் ஒப்பமாட்டேன். அதல்ை உயிருக்கு ஆபத்து வருவதாயிருந்தாலும் சரி” என்று உறுதியாகச் சொன்னர்.