பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.2

“அப்படியானல், உம்மனேவியை இங்கிருந்து அகற்றிக் கொண்டு போய்விடும். அவர் என் வீட்டில் சாவதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்றார் மருத்துவர். “உடனே அகற்றிவிட வேண்டும் என்கிறீர்களா?” என்று கேட்டார் அடிகள்.

டாக்டர் சினத்தோடு, ‘இது என்ன கேள்வி: அகற்றி விடவேண்டும் என்று எப்போது சொன்னேன்? மருத்துவம் செய்வதால் எனக்கு முழு உரிமையும் கொடுக்க வேண்டும் என்றுதானே கேட்கிறேன். அப்படிக் கொடுத்தால் கானும் என் மனேவியும் கூடியதையெல்லாம் செய்யத் தயாராயிருக் கிருேம். இங்தச் சிறிய கருத்தை உம்மால் அறிந்துகொள்ள முடியவில்லையே!’ என்றார்,

கயத்திலுைம் பயத்திலுைம் மருத்துவர் கூறிய தொன்றும் அடிகளிடம் பலிக்கவில்லை. அவர் உடனே கஸ்தூரிபாயிடம் சென்றார். மிகவும் வலிவிழந்த நிலையில் இருந்தபோதிலும், அவரிடம் கேட்டுவிட வேண்டும் என்று. முடிவு செய்து, மருத்துவரின் கருத்தை கஸ்துசரிபாயிடம் தெரிவித்தார். மருத்துவருக்கும் தமக்கும் இடங்த உரை யாடலையும் கூறினர்.

அன்னே கஸ்தரரிபாய் உறுதியான குரலில், மாட்டி றைச்சிச் சாறு எனக்கு வேண்டாம். அதை ஒருநாளும் சாப்பிடமாட்டேன். மக்கட் பிறவி கிடைத்தல் அரிது. அப்படிக் கிடைத்த அரிய பிறவியை, இத்தகைய திச் செய லால் இழிவு படுத்திக்கொள்ள வேண்டுமா? கூடவே கூடாது. அதைக் காட்டிலும் தங்கள் மடியில் படுத்து நிம்மதியாய் உயிரை விடுவேன். இங்தச் சமயத்தில் நீங்கள் வங்து சேர்ந்திர்களே அதுவே போதும்’ என்று கூறினர்.

காந்தியடிகள் சிறிது வாதாடிப் பார்த்தார் அன்னே யிடம், தம்முடைய கொள்கைக்காகக் கஸ்தூரிபாப் எந்த