பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



16

பின்னர் ஒரு தனி மூலையை நாடிச் சென்றனர். ஊமத்தை விதையை உண்ணத் தொடங்கும் போது, திடீரென்று அவர்களுக்கு உயிரின் மேல் அடங்காத ஆசை வந்து விட்டது. சுதந்திரமில்லா விட்டாலும் பரவாயில்லை; உயிர் வாழத்தான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். எல்லோரும் வீடு திரும்பி விட்டனர்.

இத் தற்கொலை நிகழ்ச்சி மற்றவர்கள் உள்ளத்தில் மறைந்து, தேய்ந்த கனவாகி விட்டது. ஆனால் காந்தியடிகளின் உள்ளத்தில் முள் போல் உறுத்திக் கொண்டிருந்தது. குற்றத்தைத் தந்தையிடம் எடுத்துக் கூறி மன்னிப்புப் பெற்றாலன்றி, அவருடைய உள்ளத்தில் நிம்மதி ஏற்படாது போல் தோன்றியது. உடனே தாம் திருட்டுத்தனமாகச் செய்த குற்றங்களை யெல்லாம் ஒரு தாளில் எழுதினர். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் படுத்திருந்த தம் தந்தையிடம் சென்றார். அவரிடத்தில் அத்தாளைக்கொடுத்து விட்டு அவருக்கெதிரிலிருந்த இருக்கையில் தலைகுனிந்த வண்ணம் உட்கார்ந்து கொண்டார். அக் கடிதத்தின் இறுதியில், தம்மை மன்னிக்க வேண்டுமென்று அவர் குறிப் பிடவில்லை. தாம் செய்த குற்றங்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டுமென்று அவர் வேண்டிக் கொண்டார். காபா காந்தி கடிதத்தைப் படித்தார். பிறகு கடந்தவற்றைக் காந்தியாரின் வாயாலேயே கேட்போம்.

“அவர் கடிதத்தை முற்றும் படித்தார். படிக்கும் போது அவர் கண்களிலிருந்து முத்து முத்தாகக் கண்ணிர் துளித்து வழிந்தது. கடிதமும் நனைந்து போயிற்று. ஒரு கண நேரம் அவர் கண்ணை மூடிச் சிங்தனையில் ஆழ்ந்தார்; பின்னர்க் கடிதத்தைக் கிழித்துப் போட்டார். கடிதத்தைப் படிப்பதற்காக எழுங்து உட்கார்ந்தவர் மீண்டும் படுத்துக் கொண்டார். நானும் அழலானேன். அவரது அளவிறந்த மனவேதனையை நான் உணர்ந்தேன். நான் ஓர் ஓவியக்