பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

படுத்திக் கொள்ளவே முடியவில்லை. அதற்குக் காரணம் எனக்கு கம்பிக்கை குறைந்து போனதா, அல்லது தட்ப வெப்ப நிலை மாறுதலா என்று சொல்லமுடியாது. தென்னப் பிரிக்காவில் வெற்றியளித்த சில முறைகள் இந்தியாவில் எனக்கு வெற்றிதாவில்லை என்று மட்டும் சொல்லு வேன்.”

சூரிய ஒளியில் இருத்தல், திறங்த வெளியில் படுத்து உறங்குதல் ஆகியவையும் காங்தியடிகளின் இயற்கை மருத்துவ முறையில் அடங்கும். அவருடைய மருத்துவ முறைகளில் முக்கியமானது பட்டினி கிடத்தல், கோயுற்ற காலங்களில் வீட்டிலுள்ளவர்கள் வெளியில் ஒடித்திரிங்து அமளி செய்யும் அளவுக்கு, நோயாளியிடம் கவனம் செலுத்துவதில்லை. ஆனல் நோயாளிகளுக்குச் சேவை செய் வதில் அடிகள் பேரூக்கம் காட்டுவார். காட்டின் பெரிய அரசியல் வேலைகள் கூட அவருக்கு இதைவிட அதிக முக்கிய மென்று தோன்றுவதில்லை. அவர் நோயாளிகளுக்குச் சேவை செய்வதற்குக் கிடைக்கும் வாய்ப்புகளே கழுவிப் போகாமல் பார்த்துக் கொள்வார். ஆகையால் அவருடைய பார்வையிலிருந்து சேவை பெற்றுக் குணமடைங்த சிலர் தங்களுடைய கற்பேற்றை எண்ணி மகிழாமல் இருக்க முடியாது.

9. உணவு

காங்தியடிகளின் வாழ்க்கையே ஒரு சோதனைக்களம். அதேபோல் அவருடைய உடலும் ஒர் ஆய்வுக் கூடம். அவ் வாய்வுக் கூடத்தில் எப்போதும் சோதனைகள் கடத்திக் கொண்டே இருப்பார். ஆகையில்ைதான். தாம் எழுதி யுள்ள நூலுக்கும் சத்திய சோதனே (My Experiments with Truth) என்று பெயரிட்டனர்.