பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



17

கலைஞனயிருந்தால், அந்தக் காட்சியை அப்படியே இன்று படமாக எழுதி விடுவேன். இன்னும் என் மனக்கண்ணின் முன்பு அக்காட்சி அவ்வளவு தெளிவாகக் காணப்படுகிறது. அவ்வன்புக் கண்ணிர்த் துளிகளினால் என் இதயம் தூய்மை பெற்றது; என் பாவம் நீங்கியது. அத்தகைய அன்பை அனுபவித்தோர் மட்டுமே அதன் ஆற்றலை உணர்தல் கூடும்."

இந் நிகழ்ச்சியால், காந்தியடிகளுக்கு இளமையில் சத்தியத்தின்பால் ஏற்பட்டிருந்த பற்று விளங்கும். அதோடு மற்றாென்றையும் உணரலாம். வேறு ஒரு தங்தையாக இருந்தால் மனமுருகி அழுதிருக்கமாட்டான். தடி எடுத்துக் குற்றம் செய்த தனயனைத் தாக்கி யிருப்பான். ஆனல் காபா காந்தி, ஏன்? என்று தம் மகனே ஒரு சொல் கூடக் கேட்கவில்லை. தடியால் அடித்துச் சாதிக்க முடியாததைத் தம் கண்ணிரால் - அகிம்சையால் - சாதித்து விட்டார் காபா காந்தி. தங்தையின் இச்செயலால் தாம் அகிம்சையின் ஆற்றலை அப்பொழுதே உணர்ந்து கொண்ட தாகக் காந்தியடிகள் கூறுகிரு.ர்.

 +:

நாள் தோறும் பள்ளிவிட்டதும் காந்தியடிகள் நேராக வீட்டிற்குச் சென்றுவிடுவது வழக்கம். நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடந்த தங்தைக்குப் பணிவிடை செய்வதற்காகவே அவர் சீக்கிரம் செல்வார். சனிக்கிழமை நாட்களில் காலையில் மட்டும் பள்ளி உண்டு. மாலை நான்கு மணிக்கு உடற்பயிற்சி வகுப்புக்குமட்டும் செல்லவேண்டும். ஓர் சனிக்கிழமைமாலே வானத்தை மேகம் மூடி மறைத்துக் கொண்டதால் நேரம் தெரியவில்லை. காந்தியார் தங்தையின் பணிவிடையிலேயே மெய்மறந்து இருங்து விட்டார். பள்ளிக்குச் சென்றபோது உடற்பயிற்சி வகுப்பு முடிந்து மாணவர்கள் வீடு திரும்பிவிட்டனர். திங்கட்கிழமை