பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

பில் ஒரு வேஷ்டியும், மேலே ஒரு அங்கியும், தலையில் காஷ் மீர் குல்லாயும் தரித்து எளிய தோற்றத்தோடு விளங்கினர். அவர் தாகூரோடு அமர்ந்திருந்ததானது சிங்கத்தின் அ ரு கி ல் சுண்டெலியொன்று அமர்ந்திருப்பதுபோல் காணப்பட்டது. அவர்கள் அருகில் நண்பர்களெல்லாம் அமர்ந்திருந்தனர். உலகம் போற்றும் ஒரு கவிஞரும், ஒரு மகாத்மாவும் சந்தித்தால் சொல்லவேண்டுமா? ஏதோ பெரிய கருத்துக்களெல்லாம் அவர்களுடைய வாயில் புரண்டு ஒடப் போகின்றன என்று எதிர்பார்த்தார்கள் அங்கிருந்த நண்பர்கள்.

உணவு பரிமாறப்பட்டது. சமையற்காரன் பூரியும் மசாலும் கொண்டுவந்து வைத்தான். உடனே காங்தியடி கள் தம் உரையாடலைத் துவக்கினர். எதைப் பற்றி? அரசியலைப் பற்றியா? இலக்கியத்தைப் பற்றியா? அல்ல! உணவைப்பற்றி!

“குருதேவ் (ஆம்! காந்தியடிகள் எப்போதும் தாகூரை அவ்வாறுதான் பெருமதிப்போடு அழைப்பார்) பூரியை எண்ணெயிலும், நெய்யிலும் போட்டுப் பொரிப்பதை நான் விரும்புவதில்லை. அவ்வாறு செய்வது நல்ல தானியத்தை கஞ்சாக்குவதாகும்” என்று கூறினர் மகாத்மா.

“இருக்கலாம். ஆனல் மிகவும் மிதமான நஞ்சு போலும் கான் என் வாழ்நாள் முழுவதும் பூரியைத் தின்று வருகி. றேன் எனக்கொன்றும் அவ்வளவாக அது திங்கு செய்ய வில்லை,” என்று சிரிக்காமல் பகிலுரைத்தார் கவிஞர்.

  காகா காலேல்கர் முதன் முதலாக ஆசிரமத்தை அடைந்தபோது, அங்கு சமைக்கப்பட்ட அரிசி உணவு அவருக்குப் பிடிக்கவே இல்லை. அவர் காங்தியடிகளிடம், “பாபு ஆசிரமத்து அரிசிச் சோறு களிமண்ணைப்போல் இருக்கிறது. என்னல் உண்ணவே முடியவில்லே’ என்று சொன்னர்.