பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 3

பொறுப்பைச் சிறிது காலம் தாங்கி வந்தார். அப்போது குமரப்பா எழுதிய கட்டுரை ஒன்று காரசாரமானதாக இருந்தது. சற்று வேகமான சொற்களைப் போட்டு எழுதி யிருந்தார். இதைப் பிடித்த ஒர் அஹிம்சாவாதி காந்தி யாரிடம், ‘பாபு குமரப்பா எழுதிய கட்டுரை சற்று வேக மாக இருக்கிறது அவர், எழுத்துத் துறையில் இன்னும் கொஞ்சம் அஹிம்சையைக் கடைப்பிடித்தால் நல்லது’ என்று சொன் னர்.

அதற்குக் காங்தியடிகள் ‘குமரப்பா சென்னை வாசி யல்லவா! மிளகாயின் காரம் அவர் குருதியிலும் கலந்து ஒடுகிறது” என்று சிரித்துக் கொண்டே சொன்னர்.


புதிய புதிய கருத்துக்களை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் காந்தியடிகளுக்கு இருந்ததைப் போன்று விஞ்ஞானிகளுக்குக்கூட இருந்திருக்க முடியாது. ஆய்வுக் கூடம் எதுவும் அவருக்குக் கிடையாது. ஆனல் விடாமல் சோதனைகள் கடத்திக் கொண்டிருப்பார். அடிக்கடி உணவு களே மாற்றி, அவற்றின் பலாபலன்களே அறிய முனைவார். காங்தியடிகள் மகன்வாடியில் இருந்தபோது அங்கு கிறைய வேப்ப மரங்கள் இருங்தன. தினமும் 10 தோலா வேப் பிலையை எடுத்துத் துவையல் செய்து சாப்பிட்டுச் சோதனை கடத்தினர். ஒருநாள் குமரப்பா காங்தியடிகளின் வலது புறமும், வல்லபாய் படேல் இடது புறமும், அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர். காங்தியடிகள் வேப்பங் துவையலோடு போராடிக் கொண்டிருந்தார். ஒரு தேக் கரண்டி துவையலே எடுத்துக் குமரப்பாவின் தட்டில் போட்டார். காங்தியடிகளின் தாயன் பை அருகிலிருந்து கண்ட வல்லபாய் படேல், “குமரப்பா! பாபு ஆட்டுப்பாலைக் குடிக்கத் தொடங்கியதோடு, அதனுடைய உணவையும் உண்ணத் தொடங்கி விட்டார்” என்று கூறிச் சிரீத்தார்,