பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I84

காங்தியடிகளுக்குக் காபியும் தேருேம் பிடிக்காது அவர் தென்னப்பிரிக்காவிலிருந்த போதே அப்பழக்கத்தை விட்டுவிட்டார். ஆனல் மற்றவர்கள் விஷயத்தில் இப் பழக்கத்தை இவர் அவ்வளவாகக் கட்டுப்படுத்துவதில்லை. காந்தியடிகள் தம் கண்பர்களோடு அயலூருக்குப் பயணம் செய்யும்போது, புகைவண்டியில் அவர்கள் உட்கார்ந்த வண்ணம் தாங்குவார்கள். வண்டி ஒரு கிலேயத்தை அடைங் ததும், உடனே காங்தியடிகள் கீழே இறங்கி கான்கைந்து கோப்பைத் தேநீரை வாங்கி ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து கண்பர்களுக்குக் கொடுப்பார். காந்தி யடிகள் என்ன சொல்லுவாரோ என்று அஞ்சியே அந்த கண்பர்கள் தேநீர் அருந்தும் ஆசையைப் பொறுத்துக் கொண்டு வங்திருப்பார்கள். அடிகளே தேநீர் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பதைக் கண்டதும் அவர்கள் வியப் பினல் வாயடைத்துப் போவார்கள்.

காந்தியடிகள் நோயாளிகளுக்குச் சிறந்த செவிலித் தாய் என்பதை முன்பே படித்தோம். அவர் நாள்தோறும் நோயாளிகளைக் கண்டு சிறிது நேரம் பேசிச் சிரித்துக் கொண்டே அவர்களுக்குத் தொண்டு செய்வார். காந்தி யடிகளே நாள்தோறும் கண்டு அவருடைய நகைச்சுவை யைக் கேட்க வேண்டும் என்று எண்ணும் சிலர் வேண்டு மென்றே நோய்வாய்பட்டதாகக் கூறுவர்.

ஒருமுறை தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் வயிற்றுப் போக்கினல் அவதிப்பட்டான். அவனுக்கு ஆசிரமச் சாப்பாடு வந்த புதிதில் ஒத்துவரவில்லை. படுக்கை யில் கிடந்தான். காள்தோறும் காங்தியடிகள் நேரில் வங்து அவன் நோயைப்பற்றி விசாரித்துச் செல்வது வழக்கம். நோய் தணிந்தது. அவ்விளேஞன் காபிப் பிரியன். ஆனல் காபி ஆசிரமத்தில் கிடையாது. காபி குடிக்கக் கூடாது என்பது ஆசிரமச் சட்டங்களில் ஒன்று. ண்ேட நாள் காபி