பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

குடிக்காத அவ்விகளஞனுக்குக் காபியின் ஏக்கம் அதிக மாயிற்று. அப்போது காங்தியடிகளின் மரச் செருப்பின் ஓசை டக் டக் என்று கேட்டது. அடிகள் வந்தார்.

‘என்ன தம்பி1 உடல்நிலை கன்றாக இருக்குமென்று எண்ணுகிறேன். என்ன சாப்பிடுகிறாய்? உப்புமா வேண் டுமா? அல்லது தோசை வேண்டுமா?” என்று கேட்டார். உப்புமா, தோசை, இட்டிலி ஆகியவற்றில்தான் தமிழ் காட்டுக்காரர்கள் உயிரையே வைத்துக் கொண்டிருக்கிறார் கள் என்று காங்தியடிகளுக்குத் தெரியும்.

“எனக்கு அவையெல்லாம் வேண்டாம் பாபு ஒரு கோப்பைக் காபி இருங்தால் கொடுங்கள்’ என்று கேட்டான் இளேஞன்.

‘ஒl இரங்கத்தக்க குற்றவாளி உனக்குக் காபி தானே வேண்டும்? அதோடு வாட்டிய ரொட்டித் துண்டு ஒன்றும் கொண்டுவருகிறேன்! காபிக்கும் அதற்கும் கன பொருத்தமாக இருக்கும்’ எ ன் று சிரித்துக்கொண்டு கூறினர்.

காந்தியடிகள் அவ்விடத்தை விட்டு அகன்றதும் இளைஞன் சிந்தித்தான். அப்போது இரண்டுங் கெட்டான் நேரம். உணவு விடுதியும் மூடப்பட்டிருக்கும். கஸ்தூரி பாயும் வேலேயின் அலுப்பு நீங்க ஒய்வெடுத்துக் கொண் டிருப்பார். இந்தச் சமயத்தில் தனக்காக யார் காபி போட்டுக் கொடுக்கப் போகிறார்கள்? என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

“டக் டக்’ என்ற ஒலி மீண்டும் கேட்டது! ஆம்! காங்தியடிகளே ஒரு தட்டில் காபியும் வாட்டிய ரொட்டியும் வைத்துக் கதர்த் துணி ஒன்றால் மூடி எடுத்து வந்தார்.

‘பாபு நான் உங்களுக்கு மிகவும் தொல்லே கொடுத்து விட்டேன். நீங்களே சுமந்துகொண்டு வருகிறீர்களே! வேறு யாரிடமாவது கொடுத்து அனுப்பினல் என்ன?” என்று கேட்டான் இளைஞன்.

ம, 13