பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 8

காலை பள்ளிசென்றதும் தலைமையாசிரியர் காந்தியாரைக் கூப்பிட்டனுப்பினுர். ‘ஏன் உடற்பயிற்சி வகுப்புக்கு வரவில்லே?” என்று கேட்டார்.

“வானத்தை மேகம் மறைத்துக் கொண்டதால் நேரம் தெரியவில்லை. என்னிடத்தில் கடிகாரமும் இல்லே. அதனுல் வகுப்புக்குவரக் காலதாமதமாகி விட்டது’ என்று உண்மை யைக் கூறினர். ஆனல் தலைமையாசிரியர் அதை கம்ப வில்லை. பொய் கூறியதாகக் கூறி, இரண்டணு தண்டம் விதித்தார். காந்தியார் உள்ளம் மிகவும் கலங்கினர். தண்டனைக்காக அவர் வருந்தவில்லை. தாம் பொய் கூறிய தாகத் தலைமையாசிரியர் கடிந்துரைத்ததே அவர் உள்ளத்தை மிகவும் வருத்தியது.

3.

காந்தியடிகள் இங்கிலாந்து காட்டில் வழக்கறிஞர் கல்வி பயின்று கொண்டிருந்தபோது, இந்திய மாணவர்கள் கிறையபேர் அங்குப் பல துறைக்கல்வியும் பயின்று கொண் டிருந்தனர். திருமணம் செய்து கொண்டு கல்வி பயிலும் வழக்கம் ஆங்கில காட்டில் கிடையாது. நம் காட்டிலும் பண்டைக் காலங்களில் அப்படித்தான். பள்ளி வாழ்க் கையைப் பிரமச்சரியம்’ என்று கூறும் வழக்கம் அதனல் தான் வங்தது. ஆனல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இளமை மணம் இந்திய காட்டில் மிகுதியாக கடந்து வங்தது. பிறந்தவுடனேயே குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவிடும் வழக்கம் இந்திய நாட்டில் இருந்தது என்று கூறினல் மிகையல்ல. இங்கிலாந்தில் கல்வி பயின்றுகொண் டிருந்த இந்திய இளைஞர்களில் பலர் திருமணமானவர்கள். ஆனல் தங்களேத் திருமணமானவர்கள் என்று கூறிக் கொள்ள அவர்கள் மிகவும் வெட்கப்பட்டார்கள். இதற்கு மற்றாெரு காரணமும் உண்டு. இங்கிலாந்து சென்ற இந்திய மாணவர்கள் எல்லோரும் ஏதேனும் ஓர் ஆங்கிலக்