பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 95

2. வழக்கறிஞன் உழைப்பும், காவிதன் உழைப்பும் ஒரே பெறுமானமுள்ளவைதான். ஏனெனில், அனேவருக்கும் தங்கள் உழைப்பினல் வாழ்க்கைக் குச் சம்பாதிக்கும் உரிமை சமமாக உண்டு. 8. உடலே உழைத்து வாழும் வாழ்வே, அதாவது குடியானவனுடைய அல்லது பாட்டாளியின் வாழ்க்கையே மேன்மையான வாழ்க்கையாகும். முதல் இரு கொள்கைகளும் ஏற்கனவே காந்தியடி களால் நன்கு அறியப்பட்டவை. ஆனல் மூன்றாவது கொள்கை அவருக்குப் புதிதாக இருந்தது. ஆயினும் அது உண்மை-சிறந்த உண்மை-என்பது இப்போது அவருக்குத் தெளிவாயிற்று. அந்தக் கொள்கைக்கு இணங்கத் தம் வாழ்க்கையைச் செப்பனிடுவது பற்றிச் சிந்திக்கத் தொடங்: கினர். அன்றிரவெல்லாம் புகைவண்டிப் பயணத்தின்போது உறங்காமல் சிந்தனை செய்து கொண்டிருந்தார். சிந்தன டர்பன் நகரம் சென்றவுடன் செயலாக உருக்கொண்டது.

  • காங்தியடிகள் தென்னுப்பிரிக்காவில் வாழ்ந்தபோது, துவக்கத்தில் மேகாட்டு நாகரிகத்தின்பால் மிகவும் விருப்புக் கொண்டு வாழ்ந்தார். தொண்டில் பற்று அதிகம் ஆக ஆக, ஆடம்பரத்தில் வெறுப்பு மிகுந்தது. வாழ்க்கையை எளிமைப்படுத்தத் தொடங்கினர். வண்ணனிடம் துணி களேச் சலவைக்குப் போடுவதில் பணம் அதிகச் செலவான துடன், சமயத்தில் துணிகள் வருவதில்லையாதலால் நிறையச் சட்டை துணிமணிகள் வேண்டியிருந்தன. எனவே சலவைச் சாமான்களும், இஸ்திரிப் பெட்டியும் வாங்கி வைத்துக்கொண்டு காக்தியடிகள் தாமே துணிகளை வெளுத் துக் கொள்ளத் தொடங்கினர். முதன்முதலில் சலவை. சரியாக வரவில்லே. கழுத்துப் பட்டைக்குப் பெட்டி போட்டதில் பசை மாவு அதில் அதிகமாக ஒட்டிக்கொண்டு. வழக்கு மன்றத்துக்குப் போன பிறகு உதிர்ந்து விழத்