பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

குடும்பத்திலேயோ அல்லது ஆங்கில இந்தியக் குடும்பத் திலேயோ தங்கிக் கல்வி பயில வேண்டியிருந்தது. அதுதான் சிக்கனமாகவும் வசதியாகவும் இருந்தது. இவர்கள் சேர்ந்து வாழும் குடும்பத்தில் திருமணமாகாத இளம் பெண்களும் இருப்பார்கள். ஆங்கில காட்டுப் பெண்கள் உரிமை மிக்க வர்கள். தங்கள் கணவனைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பழக்க முடையவர்கள். அவர்கள் தங்கள் இல்லத்தில் தங்கியிருக்கும் இந்திய இளைஞர்களுடன் நெருங்கிப் பழகுவார்கள்; உறவு கொள்வார்கள். அவர் களுடைய பெற்றாேர்களும் அதை அனுமதித்தார்கள். தாங்கள் மணமானவர்கள் என்ற செய்தி தெரிந்துவிட்டால் இளம்பெண்களுடன் உலாவப் போகவும், கேளிக்கை கடத் தவும், தொடர்பு கொள்ளவும் இடமில்லாமல் போய் விடுமே என்பதற்காகவும் இந்திய இளைஞர்கள் உண்மையை மறைத்தனர்; பொய் வாழ்வு வாழ்ந்தனர்.

இத்தொற்று நோய் காங்தியாரையும் பற்றிக் கொண்டது. காந்தியாருக்குப் பதின்மூன்றாம் வயதிலேயே திருமணம் கடங்துவிட்டது. இந்துக்களின் வீட்டில் திருமணம் என்றால் பண்டைக் காலத்தில் சாதாரணமான காரியமல்ல. பல மாதங்களுக்கு முன்பிருந்தே பொருள் களேச் சேகரிக்கவும், துணிமணிகள் தயாரிக்கவும் நகைகள் செய்யவும் தொடங்கி விடுவார்கள். ஒரு மாதத்திற்கு முன் பிருந்தே விருந்துகளும் ஆர்ப்பாட்டங்களும் துவங்கிவிடும். ஆயிரக்கணக்கில் பொருள் செலவாகும். திருமணம் செய்தே ஒட்டாண்டியாகப் போனவர்கள் பலபேர். ஆகை யில்ை ஒரே செலவாகப் போய்விடட்டும் என்று இரண்டு மூன்று திருமணங்களே ஒன்றாக கடத்திவிடுவார்கள். காங்தி யாருக்கும், அவருடைய தமையனருக்கும், சிறிய தங்தை யின் மகனருக்கும் ஆக மூன்று திருமணங்கள் ஒன்றாக கடந்தன. கஸ்தூரிபாய்க்கும் அப்போது வயது பதின்