பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303

படும் கோக்கத்துடன் ஆமதாபாத்தில் துவக்கப்பட்ட தாகும். குஜராத்தி மாநிலக் காங்கிரஸ் குழுவாகவும் அந்தச் சபை செயலாற்றியது. குஜராத்தி மக்களின் குறைகளே அழகிய ஆங்கில கடையில் அரசியலாருக்கு அடிக்கடி விண்ணப்பங்களின் மூலம் கினைவுபடுத்திக் கொண்டிருப்பதுதான் அக்காலத்தில் அச் சபையின் தொண்டாகக் கருதப்பட்டது.

காந்தியடிகள் பீகாரிலுள்ள மோதிகாரி மாவட்ட நீதி பதியின் ஆனேக்குக் கீழ்ப்படிய மறுத்த செயல். இந்திய காட்டில் ஒரு விழிப்பை உண்டாக்கியது. இந்திய காடே காங்தியடிகளின் அஞ்சாமையைக் கண்டு வியங்தது. காந்தி யடிகளின் ஆங்கில கடை ஆங்கிலேயரே போற்றும் சிறப்பு வாய்ந்தது. எனவே அஞ்சாமையும், எழுத்தாற்றலும் மிக்க காங்தியடிகளைத் தம்முடைய குஜராத்தி சபைக்குத் தலைவராக ஏற்றுக் கொள்ளக் குஜராத்திமக்கள் விரும் பினர். அச்சபையின் செயலாளராக விளங்கிய ஜி. வி. மாவ் லாங்கர் 1917-ஆம் ஆண்டு காங்தியடிகளே அண்மி, மேற்படி சபைக்குத் தலைவராக விளங்கும்படி கேட்டுக் கொண்டார். காங்தியடிகளும் அவ்வேண்டுகோளுக்கு இசைங்தார். அவர் தலைமை ஏற்றவுடன் அச்சபை மிகவும் ஊக்கத்துடன் பணி புரியத் தொடங்கியது.

சபையின் கடிதப் போக்குவரத்துக்காக “லெட்டர் பேட் அச்சிடப்பட்டது. அதின் வலது தலைப்பில் தலைவரின் பெயரும், மற்ற பொறுப்பாளர்களின் பெயரும் அச்சிடுவது முறையல்லவா? அதையொட்டி மாவ்லங்கர், ‘மோகன தாஸ் கே. காங்தி அவர்கள், பார்-அட்லா” என்று அச்சிட்டார். அவ்வாறு அச்சிட்ட கடிதத்தைக் கண்ட காங்தியடிகள், “மாவ்லங்கர்! “என் பார்-அட்-லா என்று என் பெயரோடு சேர்த்து அச்சிட்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.