பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205

பட்டது. அதல்ை ஒர் உணவு விடுதியில் இரண்டு பெரிய அறைகளே வாடகைக்கு எடுத்துக் கொண்டு உணவு தயா ரிக்கத் தொடங்கினர். பிற்பகல் 2 மணிக்கு ஒரு மனிதர் வங்தார். எளியதோற்றமும் மலர்ந்த முகமும் வாய்க்கப் பெற்ற அவர் விருப்பத்தோடு அம் மாணவர்களின் பணியில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஒத்துழைக்கத் தொடங் கினர். பாத்திரங்களேத் துலக்கினர்; காய்கறிகள் ஈறுக் கினர்; வேறு பல அலுவல்களையும் ஊக்கத்தோடு செய் தார். அம்மனிதரின் ஒத்துழைப்பைக் கண்டு மாணவர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். -

விருங்து துவக்கப்படுவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாக வ. வெ. சு. அய்யர் வந்தார், சமையலறையில் உற்சாகத்தோடு வேலை செய்து கொண்டிருக்கும் புதிய மனிதரைக் கண்டு பெரு வியப்பில் ஆழ்ந்தார்! காங்தி யடிகள் தாம் அப் புதிய மனிதர்! ஐயரவர்களும் பிற மாணவர்களும் எவ்வளவோ தடுத்தும் காக்தியடிகள் தம் வேலையை கிறுத்தவில்லை. வி ரு ங் து துவக்கப்பட்டது. அடிகள் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு மேசை காற்காலிகளை எடுத்துப் போட்டார். உணவுகளைப் பரிமாறினர். இறுதியில் விருந்திற்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவாற்றினர்.


காங்தியடிகள் சிறுவராயிருந்தபோது, அவருடைய இல் லத்தில் அரம்பை என்ற வேலைக்காரி ஒருத்தி இருந்தாள். ஆனல் அடிகள் அவளைத் தம் தாய் போலக் கருதிவந்தார். பம்பாயில் வழக்கறிஞர் தொழில் கடத்தி வந்தபோது, அவர் வீட்டில் ஒரு பார்ப்பனர், சமையல் தொழில் செய்து வந்தார். காங்தியடிகளுக்கு அப்போதெல்லாம் ஆங்கில காகரிகத்தில் அலாதிப் பிரியம். ஆடம்பரத்தில் அளவு கடந்த பற்று. ஆயினும் வேலைக்காரனே வேலைக்காரகை அவர் எண்ணியதில்லை. பாதிச் சமையலை வேலைக்காரன்