பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

வேண்டும்” என்று காந்தியடிகள் குறிப்பிடுவார். கதர்த் திட்டத்திற்காகப் பொருள் திரட்டிய கேரத்தில் காங்தியடி கள் தரித்திர நாராயணனுக்காகப் பொருள் கொடுங் கள்’ என்று கேட்பார். தரித்திர நாராயணன் என் ருல் ஏழைகள் உள்ளத்தில் வாழும் இறைவன் என்று பொருள். அவ்வாறு சேர்க்கப்பட்ட பொருளைக் கிராமக் கைத் தொழில் முன்னேற்றத்துக்குச் செலவிட்டு, ஏழைகளின் கலத்துக்குப் பாடுபட்டார்.


காங்தியடிகள் செல்வர்களின் நடுவில் வாழ்வதைவிட ஏழைகளின் நடுவில் வாழ்வதையே பெரிதும் விரும்பினர். வட்டமேசை மாநாட்டிற்காகக் காந்தியடிகள் இலண்டன் சென்றார். அம்மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகள் தங்கு வதற்கென்று, ஆங்கில அரசாங்கத்தாரால் ஹைட் பூங்கா (Hyde Park)விற்கு எதிரில் ஒர் அழகிய மாளிகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எடுபிடி ஆட்கள் ஏராளம்; ஆடம் பரத்திற்குக் குறைச்சலில்லை; மிக விலையுயர்ந்த உணவு. இத்தனே வசதிகளோடு கூடிய அம்மாளிகையில் காக்தியடி கள் தங்க விரும்பவில்லை. இலண்டன் மாநகரில் ஏழைகள் வாழும் பகுதி பெள’ என்ற இடமாகும். அது இலண்ட ளிைன் கிழக்குக் கோடியில் உள்ளது. அங்கிருந்த கிங்ஸ்லி ஹால் என்ற இடத்தில் காந்தியடிகள் தங்கினர். “நான் ஏழைகளுக்காக என்னை ஆட்படுத்திக் கொண்டேன். ஆகையில்ை ஏழைகள் வாழும் பகுதியிலேயே தங்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

 *

1926-27-ஆம் ஆண்டுகளில் காந்தியடிகள் தமிழ் காட்டில் கதர்ப் பிரசாரச் சுற்றுச் செலவை முடித்துக் கொண்டு ஒரிசா மாநிலம் சென்றார், ஒரிசாவில் ஈடாமதி’ என்ற ஊரை அடைந்தார். அங்கு ஒரு பொதுக் கூட்டத் துக்கு ஏற்பாடாகியிருந்தது. மக்கள் அடிகளிடம் நிதி