பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317

அவரவர்,அவரவர்க்குரிய தாய்மொழியிலேயே கல்வி பயிலல் வேண்டும். தமிழ் மக்கள், தம் மொழியை ஆங்கிலம் முதலிய மொழிகளைவிட முதன்மையாகக் கருதவேண்டும். தமிழ்நாட்டில் ஒரிடத்தில் எனக்கு ஆங்கிலத்தில் வரவேற்பு அறிக்கை வழங்கப்பட்டது. உடனே நான் அதை மறுத் துரைத்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வறிக்கை தமிழில் எனக்கு அளிக்கப்பட்டிருந்திருப்பின் கான் பெரி தும் மகிழ்ந்திருப்பேன்.”

“தமிழ் மக்கள் எனது குருதிக் கலப்புற்ற உடன்பிறக் தவர் போலத் தோன்றுகிரு.ர்கள்.”

-

1912-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 22-ஆம் நாள் கோகலே தென்னுப்பிரிக்க மக்களின் 38லமையை அறிவதற் காக வந்தார். தென்னப்பிரிக்க அரசாங்கமும், வெள்ளேக் காரர்களும் கோகலேயை நல்ல முறையில் வரவேற்றுப் பாராட்டினர். அவர் பல பொதுக்கூட்டங்களில் பேசி ஞர். அவருடைய பேச்சு வன்மை, இந்தியர் ஐரோப்பியர் ஆகியோரின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. தென் குப்பிரிக்காவில் அவர் சுற்றுப் பயணம் செய்வதற்காக அரசாங்கத்திற்கு உரிமையான ரயில்வே சலூன்” ஒன்றும் வழங்கப்பட்டது. ஜொகன்னஸ்பர்க் இந்தியர்கள், ரொடி சியாவில் உற்பத்தியாகும் உயர்ந்த தேக்குமரச் சட்டத்தில் தங்கத் தகடு அடித்து அதில் வரவேற்பறிக்கை எழுதிக் கோகலேக்கு அளித்தனர்.

ஜொகன்னஸ்பர்க்கில் இந்தியர்கள் ஏற்பாடு செய் திருந்த பொதுக் கூட்டமொன்றில் கோகலே பேசவேண்டி யிருந்தது. கோகலே ஆங்கிலத்தில் மாபெரும் சொற்பொழி வாளர். ஆங்கிலேயரும் வியக்கும் வண்ணம் பேசும் சொல் லேருழவர். எல்லா இடங்களிலும் அவர் ஆங்கிலத்திலேயே பேசினர். ஆனல் இக் கூட்டத்தில் அவருடைய காய்

14